பக்கம்:சைவமும் தமிழும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 83 வருதலைக் காணலாம். திருமுறைகளை நீ ஒதுங்கால் இவற்றைக் குறிப்பாகக் கவனித்து அறிவாயாக. இறைவன் செய்யும் ஐந்தொழில் மூவகைப்படும். அவை துால ஐந்தொழில், குக்கும ஐந்தொழில், அதி சூக்கும ஐந்தொழில் என்பவையாகும். உலகத்தைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளுவது துரல ஐந்தொழிலாகும்; உலக முழுவதையும் அழித்த பின்னர் மீளவும் தோற்றுவித்தற்கு ஆவன செய்தல் சூக்கும ஐந் தொழில்; உயிர்கள் தம் உடம்பைக் கொண்டு பொருள்களை அறிந்து அநுபவிக்குங்கால், அவற்றின் அறிவுக்கு அறிவாய் நின்று அவற்றை அறிவித்து நிற்றல் அதிசூக்கும ஐந்தொழில், அதிசூக்கும் ஐந்தொழிலை மெய்கண்டார் சி. ஞ. போ. ஆறாம் சூத்திரத்தில் கூறி புள்ளார். அதில் கூறியவாறு இறைவன் அறிவியா தொழி லின், உயிர்கள் எதையும் அறிய மாட்டா. மேலும் சில கருத்துக்களை அடுத்த கடிதத்தில் தெரிவிப்பேன். அன்பன், கார்த்திகேயன். 德烹 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலம். நலமே விழைகின்றேன். இறைவனின் திருமேனி பற்றி மேலும் சில கருத்து களைத் தெரிவிப்பேன், இறைவனுடைய உருவத் திருமேனி போக வடிவம், போக வடிவம், வேக வடிவம் என்று மூவகைப்படும். போக வடிவம் உலக இன்பத்தைத் தருதற் பொருட்டு மணக்கோலம் கொள்ளுதல்