பக்கம்:சைவமும் தமிழும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சைவ சமய விளக்கு போன்றவை. யோக வடிவம் ஞானத்தைத் தகுதற். பொருட்டுக் குருமூர்த்தியாய் எழுந்தருளியிருத்தல் போன்றவை. வேக வடிவம் உலகத்தார்க்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கப் போர்க்கோலம் கொள்ளுதல் போன்றவை யாகும். இறைவன் போகவடிவம் கொண்டாலல்லது உயிர் கட்குப் போகம் அமையாது; யோக வடிவம் கொண் டாலல்லது உயிர்கட்கு ஞானம் உதியாது; வேக வடிவம் கொண்டாலல்லது உலகிற்கு வரும் துன்பம் நீங்காது. இறைவன் சனகாதி முனிவர் பொருட்டு யோகியாய் இருந்த காலத்தில் உயிர்கட்குப் போகம் முதலியவை: அமையாதிருந்தமையைப் புராணங்கள் வசித்துப் பேசும், இறைவன் திருப்பெருந்துறையில் தம்மை பாட்கொண்ட அருமைப் பாட்டினை மணிவாசகப் பெருமான், கோகழி யாண்ட குருமணி’ 'ஈர்த்து என்னை யாட்கொண்ட எந்தை பெருமான்' "குருந்தின்கீழ் அன்றிருந்த கொள்கையும்’ என்று பேசுவர். தாயுமான அடிகளும் இறைவன் குருவாய் வந்தமையை “புத்தமிர்த போகமும்” என்ற பாடலாலும் குரு உபதேசம் செய்ததை வந்தேன் உடல் பொருள் ஆவி' என்ற பாடலாலும் குறிப்பிடுவர். இறைவன் ஐந்தொழில் செய்யுமிடத்து உயிர்களின் மேல் உள்ள கருணையாகிய இச்சாசக்தி இறைவனுக்கு எஞ்ஞான்றும் ஒரு தன்மையதாகவே இருக்கும். ஏனைய ?.ே திருவா. சிவபு, அடி. .ே கோகழி-திருப்பெருத் துறை 74. டிெ. டிெ. அடி. 74. 75. டிெ. கீர்த்திதிரு, அடி. 61 76. தா. பா. தேசோமயானந்தம்-11 77. டிெ. ஆகார புவனம்.18