பக்கம்:சைவமும் தமிழும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 9 : ஞானசக்தியும் கிரியாசக்தியும் அடங்குதல், மிகுதல், குறை தல் என்னும் தன்மைகளை அடையும். இந்நிலைகள் பற்றி இறைவனும் பல நிலைகளை உடையவனாய் இருப்பான். இந்நிலைகள் ஒரு வகையில் ஐந்தாகவும், மற்றொரு வகையில் ஒன்பதாகவும் கூறப்பெறும். அவந்றுள் ஐந்தாவன: சிரியா சக்தி அடங்கியிருக்க ஞானசக்தி மட்டிலும் தொழிற்படும் நிலையில் சிவன் என்று பெயர் பெறுகின்றது. ஞானசக்தி அடங்கியிருக்க, கிரியாசக்தி மட்டிலும் தொழிற்படும் நிலையில் சக்தி என்று வழங்கப் பெறுகின்றது. ஞான சக்தியும் கிரியாசக்தியும் தொழிற். படும் நிலையில் சதாசிவன் என்று திருநாமம் பெறுகின்றது: ஞானசக்தி குறையக் கிரிபாசக்தி மிகுந்து தொழிற்படும் நிறையில் மகேசுரன் என்றும், கிரியாசக்தி குறைய ஞான சக்தி மிகுந்து தொழிற்படும் நிலையில் வித்தியேசுரன் என்றும் பெயர்களைப் பெறுகின்றன. இவற்றை முன்னர் வேறொருவிதமாகவும் விளக்கியுள்ளேன்." - இனி இறைவனது நிலைகள் ஒன்பதாவதை விளக்கு வேன். ஞானமும் கிரியையும் தனித்தனியாகத் தொழிற் படும் நிலையில் பொதுவாகத் தொழிற்படுதல், சிறப் பாகத் தொழிற்படுதல் என இரண்டாகி நிற்கும். ஞானம் பொதுவாகத் தொழிற்படும் நிலையில் சிவம் என்றும் கிரியை பொதுவாகத் தொழிற்படும் நிலையில் ஆக்தி என்றும் பெயர்களைப் பெறுகின்றன. அவை சிறப்பாகத் தொழிற்படும் நிலையில் நாதம், விந்து என இருநிலைகள் உளவாகும். வித்திகேசுரனாய் நிற்கும் ஒரு நிலையில், இறைவள் ஒருவனாய் நில்லாது, உருத்திரன், மால், அயன் முதலிய பலப்பல நிலைகளை அடைவன். எனினும், இம்மூன்று நிலைகளே சிறந்தெடுத்துக் சொல்லப்பெறும். அதனால், வித்தியேசுரன் எனத் தனியே கூறாது உருத் திரன், மால், அயன் என மூன்றாக வைத்துச் சொல்லப் 78. இயல்-2; கடிதம் 11. பக். 86.88