பக்கம்:சைவமும் தமிழும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சைவ சமய விளக்கு பெறும். இவற்றை மேற்சொன்னவற்றோடு கூட்ட, சிவம் சக்தி, நாதம், விந்து, சதாசிவன். மகேசுரன், உருத்திரன், மால், அயன் என ஒன்பதாகும், இவை கவந்தருவேதம் என்று வழங்கப் பெறும். ஆகவே, ஒருவன: இய இறைவனே உலகத்தைச் செயற்படுத்த வேண்டி நீலிந்தரு டே த க்: களாய் நிற்பன் என்று அறிந்து தெளிக. மேற்கூறியவற்றுள், முதலில் உள்ள சிவன், சக்தி, நாதம், விந்து என்னும் நான்கும் அருவத் திருமேனிகள். இதுதியில் உள்ள *மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்ற நான்கும் உருவத் திருமேனிகள். இடையிலுள்ள சதாசிவன் மட்டிலும் அருவுருவத் திருமேனி, உருவம் கண்ணுக்குப் புலனாவது; அதாவது நம்மனோர் கண்ணுக் குப் புலனாகாவிடினும், தவத்தோர் கண்ணுக்குப் புல னாவது. அருவம், அங்ஙனம் புலனாகாதது; எனினும், வரம்புபட்டு நிற்பது. அருவுருவம் கண்ணுக்குப் புலனா .யினும், ஒளிப்பிழம்பாய் நிற்பதன்றிக் கை, கால் முதலியன இல்லாதது. இலிங்க வடிவமே அருவுருவத்திருமேனி என்பதை அறிக. இக்கூறிய உருவத் திருமேனிகள் நான்கும் *அதிகாரம் (தலைமைப்பாடு) எனவும், அவ்வுருவத் திருமேனி போகம் எனவும், அருவத்திருமேனி நான்கும் *இலவம்’ எனவும் வழங்கப்படும். அதனால் இத் நிலைகளில் நிற்கும்பொழுது இறைவனும் அதிகார சிவன், போக சிவன், இலய சிவன், என்று சொல்லப் பெறுவான் (இலயம்-ஒடுக்கம்). ஆகவே, இறைவனின் தடத்த நிலையை நோக்குமிடத்து இலகம் யோகம் அதிகாரம் என மூன்றாய் அடங்கும் என்பதை உணர்ந்து தெளிக. - வித்தியேசுரனாய் நின்று இறைவன் புரியும் செயல் களைச் சற்று விரிவாக விளக்குவது இன்றியமையாத தாகின்றது. இறைவன் உயிர்கட்குப் போகம் முதலிய வற்றைச் செய்யுங்கால் தானே யாயும் செய்வன்; பிறரைக் கொண்டும் செய்விப்பன். அவற்றுள், தானே செய்யுங்கால்