பக்கம்:சைவமும் தமிழும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் § மகேசுரனாய் நின்று செய்வன்; பிறரைக்கொண்டு செய் விக்குங்கால், அவற்றை அவ்வாற்றால், நோக்குதல் பெரி தாகவும். கருதுதல் சிறிதாகவும் நிகழ வித்தியேசுரன்’ என்னும் நிலையில் நின்று செய்விப்பன். இந்நிலையில் செய்விப்பது பொதுபட ஒன்றாயினும், சிறப்பினால் பல வாய் நிற்கும். அரசன் (மக்களாட்சியில் முதலமைச்சர்) ஆணையைப் பெற்று ஆட்சி முறைக் கடமைகளில் சில வற்றைச் செய்யும் அமைச்சர்கள் போல, இறைவன் ஆணையைப் பெற்று, உலகத்தைச் சிலவகைகளில் தொழித் படுத்தும் சிறந்த தலைவர் சிலர் உளர். அவர்கள் அனந்த தேவர், சீகண்ட ருத்திரர், மால், அயன்’ என்போர். மற்றும். இந்திரன், வருணன், வாயு, அக்கினி, சூரியன், சந்திரன், நாள், கோள் முதலான எண்ணற்ற தலைவர்களும் உளர். இவர்கள் பெற்றுள்ள வடிவும் பெயரும் அவரவர்கள் ஆற்றும் தொழிலுக்கேற்ப அமைந்தனவாகும். இவற்றை இவர்கள் தத்தம் புண்ணிய விசேடத்தால் பெற்ற வர்கள், இவர்களை இவ்வாற்றால் இயக்குவதற்கு அமைந்த நிலையே வித்தியேசுர நிலை"யாகும். எனவே, இந்நிலையில் நோக்கப்பெறுவாரது நிலைபற்றி இறை வனும் பல்வேறு நிலையினனாய், அவ்வப் பெயரைப் பெற்று நிற்பன் என்பது விளங்கும். இறைவன் போகியாய் தில்லாதவழிப் போகமும், யோகியாய் நில்லாதவழி யோக மும் உயிர்கட்கு அமையாது என்பதை நீ நன்கு அறிவாய். அங்க ணமே இறைவன் அனந்தர் முதலிய நிலையினனாய். நில்லாதவழி, அவ்வந் நிலையினருக்கு அவை அமையா. ஆதவின், அவர்பொருட்டு இறைவன் அப்பல்வேறு நிலை யினனாய் நிற்பன் என்பதை அறிந்து தெளிக. දී இன்னோர் உண்மையையும் ஈண்டு நீ அறிதல் வேண்டும். அனந்தர், உருத்திரர், மால், அயன்’ என்னும் பெயர்கள் முழுமுதற் கடவுளாகிய இறைவனையும், அவ்வத் தொழில் மட்டிற்கும் முதல்வராய் நிற்கும் தனை வர்களையும் குறிப்பனவாக வரும். இப் பெயர்கட்குரிய