பக்கம்:சைவமும் தமிழும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

势4 சைவ சமய விளக்கு இறைவனது நிலைகள் சம்பு பட்சம் (சம்பு-சிவன், இதைவன்) என்றும், இப்பெயர்களுடைய தலைவர்களின் நிலைகள் அனுபட்சம் (அனு-உயிர்கள், பட்சம்-பகுதி) என்னும் வழங்கப்பெறும்: திருமுறை இலக்கியங்களில் உருத்திரர், மால், அயன்’ முதலான பெயர்கள் வருமிடத்து இவை சம்பு பட்சமாகிய சிவபிரானது நிலையையும், அனுபட்சமாகிய பிற தேவர் களின் நிலையையும் குறிக்கின்றன என்பதை அறிதல் எவ்வாறு? என்ற ஐயம் நின்பால் எழலாம். கூறுவேன்; பாடல்களில் முன்னும் பின்னும் வருகின்ற சொற் குறிப்பு களால் அவற்றை உணர்த்து கொள்ளலாம். அதாவது, சில: பிரானாயினும் ஏனைய தேவர்களாயினும் அவரவர்ககுரிய சிறப்பியல்புகள் உள்ளன. அச்சிறப்பியல்புகளை முதன்மை பாகவும் ஏனையவற்றைப் பொதுவாகவும் கூறும் முறை வால் அவ்வேறுபாடு தெளிவாகும். எடுத்துக்காட்டு ஒன்றினால்'இதனைத் தெளிவாக்குவேன். - நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண் ஞானப் பெருங்கடற்கோர் காவாய் அன்ன பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்கான் புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்" என்ற நாவுக்கரசரின் திருத்தாண்டகப் பகுதியில் நாரணன், நான்முகன், நால்வே.தன் என்பன அருளிச்செய்யுமிடத்து *புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன்தான் காண்” என்று அருளினமையின் அச்சிறப்பு பற்றி முன்னர் வந்த "நாரணன், நான்முகன்’ என்பன சம்புபட்சத்தைக் குறிக் கின்றன என்பதை அறிந்து தெளிக. இன்னும், 79. தேவாரம், 5,8:3