பக்கம்:சைவமும் தமிழும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சைவ சமய விளக்கு நூறுகோடி பிரமர்கள் கொந்தினார் ஆறு கோடி நாரயணர் அங்ங்ணே ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே." என்ற அப்பர் பெருமானின் திருவாக்கில் அயன், மால், இந்திரன் ஆகிய மூவரே சுட்டப்பெற்று சிவபிரானின் குறிப்பு இல்லாமையால் அனுபட்சத்தையே குறிப்பனவாக இருத்தல் தெளிவாகின்றதன்றோ? வாதவூரடிகளின், வான்வந்த தேவர்களும் மலையனோ டிக்திகனும் கானின்று வற்றியுய புற்றெழுந்தும் காண்பரிய தான் 8器 என்ற திருவாக்கினாலும் இவ்வுண்மையைத் தெளியலாம். இனி, சர்ம்புபட்ச அணு:பட்ச விளக்கங்களை அடுத்த கடிதத்தில் தெரிவிப்பேன். அன்டன், கார்த்திகேயன் அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன்; நலம் பல விளைந்திடுக. சம்புபட்ச-அனுபட்ச விளக்கங்களை இக்கடிதத்தில் தருவேன். இக்கடிதத்தைச் சற்று ஆழ்ந்து பயின்று சிந்திக்க வேண்டும். புண்ணிய விசேடத்தால் உலகத்தைத் தொழிற் படுத்தும் தலைமைப் பாட்டினை எய்தின அணுக்களும் 82. தேவாரம்-5.100:3 83. திருவா. திருவம், !