பக்கம்:சைவமும் தமிழும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i Ös; சைவ சமய விளக்கு தொடக்குறாதும் நிற்பர். எனினும், தம் தம் பதவியது உயர்வு தாழ்வுகளில் விருப்பு, வெறுப்புகளை முற்றும் நீங்கு வாரல்லர். தேவரின் மேம்பட்ட இந்திரன் முதலிய இறை யவர்போல், இவ்வுருத்திரரின் மேம்பட்டோர் அனந்தர் முதலிய வித் தியேசுரர் என்பதை அறிவாயாக. தேவர்கள் மூலப்பிரகிருதிக்குமேல் செல்ல மாட்டாத வர்கள். இறைவனின் ஆணை உள்ள பொழுது சிறிது காலம் சுத்த வித்தையிற் சென்று கடிதின் தம்மிடத்திற்கு மீளுதல் உடையர். உருத்திரரோ அவ்வாறின்றிச் சுத்த வித்தையிலேயே வாழ்பவர்கள். ஆயினும், இவர்கள் அதற்குமேல் செல்ல மாட்டாதவர்கள். இறைவனின் ஆணை உள்ளபொழுது ஈசுர தத்துவத்திற்குச் சென்று மீண்டும் சுத்த வித்தையை அடைவர். வித்தியேசுரர் ஈசுர தத்துவத் திலேயே வாழ்பவராவர். மேன்மேல் உள்ளவர்கள் யாவருமே கீழ்கீழ் உலகுகளில் சென்று மீளும் உரிமை பெற்றவர்கள். கீழ்கீழ் உள்ளவர்கள் அவ்வாறின்றி மேலுள்ளவர் ஆணையாலன்றித் தாமே மேற்செல்லும் உரிமை உடையவரல்லர். இந்த விவரங்களையும் நீ அறிதல் வேண்டும். இன்னொரு முக்கிய செய்தியையும் நீ அறிதல் வேண்டும். ஈசுல்ர தத்துவத்தில் மகேசுரனாய் நின்று அனந்தர் முதலியோரிைசுத்த வித்தையில் செலுத்தி ஆள் கின்ற இறைவனும், சுத்த வித்தையில் உருத்திரனாய் நின்று உருத்திரர்கட்கு எளிதிலும், மால் அயன் முதலி யோருக்கு அரிதிலும் காட்சியளித்து அவர்க்கு வேண்டுவன வற்றை முடிக்கும் இறைவனும் பொருளால் வேறல்லவரா யினும், அவ்வச்சிறப்பியல்பு தோன்ற அவ்வந்நிலையில் அவனது வடிவும் பெயரும் வேறுபட்டு நிற்கும் என்பதை உளங் கொள்க. கறைமிடறு உடைமையும் அஃது இன்மை யுமே உருத்திர வடிவத்திற்கும் மகேசுரவடிவத்திற்கும் உள்ள வேறுபாடாகும். கறைமிடறு நஞ்சுடமையை உணர்த்துவது; அதுமாசுடை உலகத்தார்க்கு அம்மாசு நீக்கி ஆளுதலுடை