பக்கம்:சைவமும் தமிழும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 101 மையைக் குறிக்கும் சிறப்படையாளமாகும். ஆகையால் உருத்திரனாய் நிற்கும் இறைவன், சீகண்ட பரமசிவன் என வழங்கப்படுகின்றான் என்பதை அறிக. > சீகண்ட பரமசிவனை யோகத்தால் வழிபட்டோர் அவனது உருவத்தையும் பெயரையும் பெறுவர்; இவர்கள் இ? கண்ட ருத்திரர் என வழங்கப்பெறுவர். ஆயினும், அவர் கட்கு பரமசிவன் என்ற பெயர் வழங்குதல் இல்லை. ஆகவே, பரமசிவனாகிய சீ கண்ட ருத்திரன் இறைவன் ஆகின்றான்; சாரூப நிலையினால் 'அவனது உருவும் பெயரும் பெற்ற சி கண்ட ருத்திரர்கள் உயிரினத்தவர்கள் ஆகின்றனர். ஆகவே, மாசுடை உலகத்தில் முத்தி அடையும் நிலையி விருப்போர்க்கு யாண்டும் முத்தியை அருளுபவன் சீ கண்ட பரமசிவனே யாவான். ஏனைப் பயன்களை அடைய விரும்புவோர்க்கு சீ கண்ட பரம சிவனேயாதல், சீ கண்ட ருத்திரர்களே யாதல் ஏற்றபெற்றியான் முன் னின்று அருளுவர் என்பதையும் அறிந்து தெளிக. சீ கண்ட ருத்திரர் அந்நிலையின் நீங்கி மேல் நிலையை அடைதலும் உண்டு என்பதை நீ அறிவையாதலின் அவர்கள் என்றும் ஒருவரே ஆகார் என்பதையும் உணர்க. எல்லையின்றிப் பெரிதாய் நிற்கும் தூய உலகத்தின் ஒரு பகுதியே மாசுடை உலகம் என்பதை நீ நன்கு அறிவாய். மாசுடை உலகத்திலும் தூய உலகம் உண்டு என்பதையும் துசய உலகில் மாசுடை உலகம் உண்டு என்பதையும் தெளிந்துள்ளாய். ஆகவே, மாசுடை உலகிலும் இறைவன் சுத்த தத்துவத்தில் தனது சக்தியால் திருமேனி கொண்டு நிற்பான். ஆதலின் மாசடை உலகில் அவனைக் காண்டலும் அவனை அணுகி நிற்றலும் கூடா என்ப தில்லை. இதனால் அறுபான் மூன்று நாயன்மார்க்கும் ஆளுடைய அடிகட்கும் நம்பி ஆரூரர்க்கும் வெளி 85. சாரூபம-நெருங்கி அளவளாவும் உரிடிையைப் பெற் றிருக்கும் நிலை,