பக்கம்:சைவமும் தமிழும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 02 சைவ சமய விளக்கு நின்றருளினவன் பரமசிவனே யன்றி உருத்திரர் அல்லர் என்பதையும் அறிக. அவர்கள் யாவரும் பெற்றது துரய உலகப் பேறேயன்றி மாசுடை உலகப் பேறன்று என்பதை யும் உணர்ந்து தெளிக. மேலும், இதனாலேயே இறைவன் உலகப் பெரு நலத்தின் பொருட்டு நிகழ்த்திய வேகம், போகம், யோகம்’ என்ற முத்திறத்து நிகழ்ச்சிகளாகத் திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், போன்ற புராணங்கள் நுவலும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பரமசிவனு டையனவேயன்றி உரு இதனுஆயவை அல்ல என்பதை அறிக. மற்ற ஒரோன்ட்த்தி, ஒல்வொரு காலத்து ஒரோ "ஒருவர் பொருட்டு நிகழ்ந்த நிகழ்ச்சிகளே உருத்திரனு டையன என்பதையும் தெரிந்து உணர்ந்து கொள்க. திருமுறைகளிலும் சிவாகமப் பொருள்களை வடித் தெடுத்துக் காட்டும் சிவஞான சித்தியாரிலும் இவை தெரிவிக்கப் பெற்றுள்ளன என்பதையும் சிந்தித்து உணர்க. இனி, சிவக்குமரார்களைப்பற்றியும் சிவகணங்களைப் பற்றியும் சிறிது விளக்கம் தருவேன். உலகில் ஒரு வருக்கு யாதொரு தலைமைப் பதவி வருவது இறைவனது திருவருளால்தான் என்பதை நீ உணர்தல்வேண்டும். தலைமையைத் தரும் திருவருள் அதிகார சக்தி' எனப் படும். தலைமைகள் பல வகைப்படுதலால் அதிகார சக்தி யும் பலவாகக் கூறப்பெறும். அவற்றுள் ஒவ்வொரு வரிடத்து ஒவ்வோர் அதிகார சக்தி பதிந்து நின்று ஒவ் வொரு தலைமையை நடத்துகின்றது. இவ்வுண்மையைத் தெளிவாக உணர்ந்து அத்தலைமையில் பற்றின்றி நிற்பவர் முத்தராவர். அவர்கட்கு அத்தலைமைப் பதவி கிடைத்தற்குக் காரணமாய் நின்ற பிராரத்த கன்மம் உள்ளத்தைத் தாக்காது, உடலுழாய்க் கழியும், அதனால் அவர்கள் சன்மம் நீங்கிய பின்னர் இறைவனோடு இரண் டறக் கலந்து பரமுத்தியை அடைவர். அவர்கள் அப் பதவியைத் தம் முயற்சியால் பெற்றதாகக் கருதி அதில் gむ。 இதன் விவரம் பயணியவில்" தெளிவாகக் காணலாம்.