பக்கம்:சைவமும் தமிழும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 臀筠 அழுந்துவோர் பெத்தராவார். இவர் பிராரத்தம் நீங்கிய வுடன் பிறிதொரு பிறப்பினை எய்துவர். இவ்வகையில் மால், அயன், இந்திரன் முதலிய தேவர்கள் பலரும் பெத்த நிலையில் உள்ளவர்களே என்பதை அறிந்து தெளிக, உருத்திரரும் வித்தியே சுரரும் இடை நிலையில் இருப்ப வர்கள். இவர்கட்கு மேல்-அஃதாவது ஈசுரதத்துவத்திற்கு மேல்-அனுசதாசிவர் முதலாகச் சிவர் எனப்படுவோர் பலர் உளர். அவர் அனைவரும் முத்தர், அயர முத்தர் ஆவர். இக் கூறிய முத்திறத்தவர்களுள் சிவக்குமாரர்' என்று வழங்கப்பெறுபவர்கள் சிவர் என்றே கொள்ள ற் பாலர். எனினும் இவரை உருத்திரருட் சிறந்தோராகக் கொள்வோரும் உளர். இதுவே தேவர் முதலியோரிடை உள்ள வேறு பாடாகும். இன்னோர் உண்மையையும் ஈண்டு நீ அறிதல் வேண்டும். அபரமுத்தர் இலயம், போகம்’ என்ற இரு நிலைகளில் நிற்பவர்களே யன்றி, அதிகார நிலைக்கு வாரார்; இடையில் நிற்போரும் பெத் தரும் அதிகார நிலையில் நிற்பவராவர். மேலும் கணம்' என்பது சுற்றம்; அவ்வத்தலைவரது நிலையே கணத்த வர்க்கும் வந்து சேரும் எனத் தெளிந்து உணர்க. இவ்விடத்தில் இன்னோர் உண்மையையும் நினைவு கூர்வேன்; விளக்கமும் தருவேன். பெத்த நிலையில் உள்ளோர்க்குப் பிறப்பு நீங்காது; முத்தி நிலையில் உள் ளோர்க்குப் பிறப்பு இல்லை- என்பதை நீ அறிவாய். இதனால் மால், அயன், இந்திரன் முதலிய தேவர்கட்குப் பிறப்பு நீங்கிற்றிலது என்பது அனைவர்க்கும் உடன்பாடு என்பதை அறிக. இடை நிலையில் உள்ள உருத்திரர்க்குப் பிறப்பு சிறுபான்மை நிகழினும் நிகழும். எடுத்துக் காட்டாக ஆலாலசுந்தரருக்கும் அநிந்திதை, கமலினி என்பார்க்கும் பிறப்பு நிகழ்ந்தமையைக் கூறலாம்.' முருகக் கடவுள் உருத்திரசன்மராய் வந்தமை கூறும் ஒரு

87. நம்பியாரூரர் வரலாற்றை நோக்கி இதன் விவரத்தை அறிக.