பக்கம்:சைவமும் தமிழும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

χV சித்தாந்தத்தின் கருத்தாகும். இறைவனது உண்மை நிலையைப் பாசஞானம், பசுஞானம் இவற்றால் அறிய இயலாது; பதி ஞானத்தால் மட்டுமே அறிய இயலும் என்பதைப் பல மேற்கோள்கள் காட்டி இந்நூல் விளக்குகின்றது. - இறைவனது சொரூய இலக்கணத்தை உபநிடதங்கள், 'சத்து'; 'சித்து', 'ஆனத்தம் என்று மூன்று தன்மைகளாகக் கூறும். இம்மூன்று சொற்களும் ஒன்றாகச் சேரும்பொழுது "சச்சிதானந்தம் என்றாகின்றது. இதனால்தான், இறைவன் *சச்சிதானந்தம்’ என்று வழங்கப்பெறுகின்றான். உயிரின் இயல்புபற்றிச் சைவ சித்தாந்தம் கூறும் கருத்துகளை இந்நூல் ஒருமைபடுத்தித் தருகின்றது. உயிர்பற்றி மெய்கண்டார் தரும் விளக்கமும் இந்நூலில் தரப்பட்டுள்ளது. உயிர் எல்லையற்று கிற்கும் வியாபகப்பொருளேயாயினும், இறைவனது வியாபகத் தில் அடங்கி கிற்பதாகும் என்பது சைவ சித்தாந்தத்தின் கருத்து. இதனையும் தெளிவாக ஆசிரியர் விளக்குகின்றார். சைவ சமயத்தைப்பற்றி இளைஞர்கள் கற்றரிய எளிய முறையில் இந்நூலை இயற்றியிருக்கின்றார் ஆசிரியர். ஆன்மிகத்தில் அநுபவமும் பற்றும் உள்ள ஒரு வயோதிகர் ஓர் இளைஞனுக்கு சைவ சமயத்தைக் கடிதம்மூலம் விளக்குவது. போல, இந்நூலை ஆசிரியர் படைத்துள்ளார். இம்முயற்சி பாராட்டுதற்குரியது. சைவ அன்பர்களும், ஆத்திகப் பெரு முக்களும் இந்நூலை வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை என்க்கு இருக்கின்றது. இந்நூலாசிரியரின் இம்முயற்சி மேலும் தொடர வேண்டும் என்பதே என் அவா அதுவே என் வேண்டுகோளு மாகும். பி. வேணுகோபால் - சென்னை-600 031 சேத்துப்பட்டு } 6-8-1 384 °