பக்கம்:சைவமும் தமிழும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 64. சைவ சமய விளக்கு வரலாறு பற்றியே அக்கடவுளை உருத்திரராகக் கருது வோரும் உளர். அங்ஙனமே ஆனை முகத்தோனையும் உருத்திரராகக் கருதுவோரும் உளர். ஆயினும், அவர்கள் பிறப்பெய்தினமைக்கு நூல்களில் ஆதாரம் இல்லை. ஆகவே அவர்களைச் சிவர்-அபர முத்தர் என்றலே பொருந்தும் என்பதை அறிந்து தெளிவாயாக, திருஞானசம்பந்தரை முருகக் கடவுளே என்று கருது வோரும் உளர். இங்ங்ணம் கருதினால் அவர் உருத்திரரா கின்றார். முருகக் கடவுளைச் சிவர் என்று கருதினால் ஞானசம்பந்தர் உருத்திரர்களுள் ஒருவரது அவதாரத் தினர் ஆகின்றார். இங்ங்ணம் இரு திறக் கொள்கைகள் சித்தாந்தத்தில் இருத்தல் பற்றியே சேக்கிழார் பெருமான். பண்டுதிரு வடிமறவாப் பான்மையோர் தமைப்பரமர் பண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருள, " என்று ஞானசம்பந்தப் பெருமானைப் பொதுப்பட அருளிச் செய்திருத்தல் சிந்தித்தற்குரியது. இன்னொரு கருத்தும் உண்டு. உருத்திரசன்மராயும், ஞானசம்பந்தராயும் பிறந்தவர்கள் பிறப்பிறப்பற்ற முழுமுதற் கடவுளாகிய முருகப் பெருமானை வழிபட்டு அவரது உலகினை அடைந்த அபரசுப்பிரமணியர்கள் ஆயினார் என்று கருதுவோரும் உளர். இம் முருகக் கடருள் சம்பு பட்சமாகிய முருகக் கடவுள் அன்றி வேறொருவர் அல்லர். அவரைச் சிவபெருமானுக்கு வேறாகக் கருதினால் அவர் அபர முத்தராகிய சிவரா கின்றார். ஆகவே, முருகப் பெருமானைச் சிவபெரு மானுக்கு வேறல்லாதவராகக் கருதியும், அவரை வேறான 88. பெரியபுரா. திருஞான. 55