பக்கம்:சைவமும் தமிழும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 懒05 வராகக் கருதியும் வழிபட்டு அபரசுப்பிரமணியராவோர் பிறப்பற்ற நிலையை அடையின் அவர் அபர முத்தராகிய சிவர் ஆகின்றார்; பிறவியுறும் நிலையில் இருப்பின் அவர் இடை நிலையில் இருக்கும் உருத்திரராகின்றார். இக் கருத்தினையும் உணர்ந்து தெளிக. இங்ங்னமே வைரவர் வீரபத்திரர் முதலியோரின் நிலைகளும் அமையும் என்ப தையும் தெரிந்து தெளிக. மேற் காட்டியவற்றால் பதியாகிய இறைவனையும் பசுக்களாகிய உயிர்களையும் அவர்களின் தன்னியல் பு (சொரூப இலக்கணம்) பற்றிப் பிரிந்தறிந்து கொள்ள லாமேயன்றி அவர்தம் பொது இயல்பு (தடத்த இலக் கணம்) பற்றி அறிந்து கொள்ளுதல் அரிதாகும். பதி, பசு இவற்றின் தன்னியல்புகளுள் (Essential nature) எவ ராலும் எளிதில் அறியத்தக்தனவாக உள்ளவை இவை: பதி இயல்பாகவே பாசத்துட் படாது தூய்மையாய் நிற்கும்; பசு இயல்பாகவே பாசத்துட் பட்டு மாசுபட்டு நிற்கும். பாசம் இல்லையேல் பிறப்பு இல்லை; பாசம் உண்டேல் பிறப்பு உண்டு என்பதை நீ நன்கு அறிவாய். ஆகவே, எங்காயினும் எவ்வாறாயினும் பிறப்பினை உறுவது உயிர்' என்றும், பிறப்பில்லாதது கடவுள்' என்றும் நீ உணர்ந்து தெளிதல் வேண்டும். அங்ஙனம் நீ உணர்ந்தால் சிவபிரான் ஒருவனே கடவுள்' என்பதையும் ஏனைய எல்லோரும் உயிரினத்தவர் என்பதையும் நீ நன்கு தெளிவாய். ஆதலின், சிவபெருமானே முதற் கடவுள்; ஏனையோர் முதற்கடவுள் அல்லர்’ என்று வரை யறுத்துக் கூறுவோர் பதியின் பிறப்பின்மையையும் பசுக் களின் பிறப்பு உண்மையையுமாகிய அவர்தம் தன்னி யல்புபற்றிக் கூறுகின்றாரேயன்றி சிவன், மால், அயன், இந்திரன் இவர்தம் பெயர்கள், வடிவு, தொழில் ஆகிய பொது இயல்புபற்றிக் கூறுகின்றார் அல்லர் என்பதை அறிவாயாக. எனவே, பல் கோடியினராகிய தேவர்கள், உருத்திரர்கள், சிவர்கள் முதலிய அனைவர்தம் இயல்பு