பக்கம்:சைவமும் தமிழும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i () & 翹母氨 馨邸像拉 fräತ್ರ களையும், யாவர்க்கும் முன்னோனும் முதல்வனுமாகிய பரமசிவனது இயல்பினையும் ஐயம் திரியின்றித் தெளிக. சிவக்கூறுபற்றிக் கூறி வந்த இவையெல்லாம் சக்திக் கூறாய் நிற்கும் தேவியர் அனைவர்க்கும் பொருந்துதலை யும் சிந்தித்து உணர்க. சக்திபற்றிச் சில சித்தாந்தக் கொள்கைளை அடுத்த கடிதத்தில் விளக்குவேன். மேலும் ஐயங்கள் இருப்பின் நேரில் பேசுவோம். அன்பன், கார்த்திகேயன். - 14 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, ந வன். நலம் பல விளைவதாகுக. இதுகாறும் எழுதிய கடிதங்களாலும் சம்புபட்ச அனுபட்ச விளக்கங் களாலும் இறைவன் தனது செயல்களைத் தனது சக்தி யினாலேயே நடத்துகின்றான் என்பதை நீ நன்கு உணர்ந் திருப்பாய் எனக் கருதுகின்றேன். எனினும், இறைவனும் அவன் சக்தியும் ஒன்றா? அல்லது வேறா? என்ற ஐயம் நின்பால் எழலாம். இதனையும் தெளிவாக்குவேன். முதல்வனும் அவனது சக்தியும் வேறல்ல: ஒன்றே. இரண்டு பொருள்களை ஒன்று என்பது எப்படி? கூறு வேன்; 'பொருள் என்ற சொல் இரண்டு பொருள்களைத் தரும். சொல்லால் குறிக்கப் பெறுவன எல்லாம் பொருள் என்பது ஒன்று. இதுவே பொருள் என்ற சொல்வின் நேர் பொருளாகும். பல பெற்றிகளுக்குச் (தன்மைகட்குச்) சார்பாய் நிற்கும் பொருள் என்பது மற்றொன்று. இது பல வற்றிற்குள் பொதுவாய் நிற்கும் ஒரு பெயரை, அவற்றுள் தலைமையுடைய ஒன்றனை மட்டும் குறிப்ப தாகக் கொள்ளப்படும் முறையில் வரும் பொருளாகும்,