பக்கம்:சைவமும் தமிழும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 1 07 பல பெற்றிகட்குச் சார்பாய் நிற்கும் பொருள், குணத்தை நோக்கி குனி என்றும், அவயவத்தை நோக்கி அவையவி' என்றும், உடைமையை நோக்கி உடையது' என்றும், இங்ங்ணம் பலவாறாகவும் கூறப்படும். இதற்கு அமைந்த நேர் சொல் முதல்’ என்பது. எனினும், பொருள் என்பது "முதல்’ என்னும் கருத்திலேயே பெரும்பாலும் வழக்கின் கண் உள்ளது. ஏனையவை குணம் அல்லது பண்பு, அவயவம் அல்லது சினை-உறுப்பு, உடைமை முதலிய சொற்களால் வழங்கப்பெறுகின்றன. முதல்’ என்பதனை வடநூலார் திரவியம்’ என வழங்குவர். திரவியமோ தமிழில் பொருள் என்றே வழங்கிவருகின்றது. இம்முறை யில் நோக்கினால் சிவமும் சக்தியும் வேறு பொருள்கள் அல்ல; அஃதாவது, இரண்டும் இரண்டு முதல்கள் அல்ல; சக்தி குணமும், சிவம் அதனையுடைய குணியுமாகும். எனவே சிவம் முதலாகின்றது; சக்தி அதன் தன்மையா கின்றது. இதனால் முதலின்றி அதன் பெற்றி இல்லை; பெற்றி இன்றி முதல் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆகவே, சிவமும் சக்தியும் ஒருவாற்றான் இரண்டாகப் புலப்பட்டாலும் உண்மையில் அவை இரண்டும் ஒன்றே யாகும். சிவம் இன்றிச் சக்தியில்லை; சக்தியின்றிச் சிவமும் இல்லை, சிவமே சக்தி, சக்தியே சிவம் சிவஞான சித்தி யாரும், அருளது சக்தி யாகும் அரன்றனக் கருளை யின்றித் தெருள் சிவம் இல்லை; அந்தச் சிவம்.அன்றிச் சக்தி இல்லை." என்று இதனைத் தெளிவாக்குவதைக் காணலாம். இக்கால அறிவியல் மேதை ஜன்ஸ்டைன் என்பார் தந்துள்ள E = mc" என்னும் மந்திரமும் (E-ஆற்றல்; n-பொருண்மை; 89. சித்தியார். 5, 9