பக்கம்:சைவமும் தமிழும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சைவ சமய விளக்கு c.ஒளிவேகம்) அம்மையப்பர் நிலையிலுள்ள இரகசியத்தை. அணுவின் அற்புத அமைப்பை-விளக்குசின்றது. *சடமே சக்தி” என்று அம்மந்திரம் கூறுகின்றது. பொருண்மையே ஆற்றலாக மாறுகின்றது என்பது ஐன்ஸ்டைன் உணர்த்திய உண்மை. இவ்வாறு முதலுக்கும் அதன் பெற்றிக்கும் உள்ள பான்மை இயைபைத் தமிழில் தற் கிழமை என்றும் வடமொழியில் சமவாயம், தாதான்மியம் என்றும் வழங்கப் பெறுகின்றன, சிவன் ஒன்றேயாக அதன் சக்தி பலவா றாகச் செயற்படுகின்றது என்பதை முன்னரே விளக்கி யுள்ளேன்." அதனை ஈண்டு நினைவுகூர்க. ஒருவனாகிய இறைவன் பல வாய்ப் பரந்த எல்லா உலகு உயிர்களோடும் கலந்து நிற்கின்றான் என்பதிை, நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு கிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வயைாய்ப் புணர்ந்துகின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோனோக்கம் ஆடாமோ. ' என்று மணிவாசகப் பெருமரனும் விளக்கியுள்ளதைக் கண்டுதெளிக. இதுதான் அவனது வியத்தகு சக்தி, சாதாரண மக்கட்கு விளங்காப் புதிர். ஒருவனாய் இருக் கும் இறைவன், பல பொருள்களிலும் நிறைந்து நிற்றற்குக் கதிரவன்-கதிர், விளக்கு-ஒளி என்ற எடுத்துக்காட்டு களால் விளக்கின்மையை ஈண்டு நினைவு கூர்க. பல் பொருள் சக்திகளைத் தொகுத்துக் கூறிவிளக் கினால் நினக்கு மேலும் தெளிவு பிறக்கும். இனி, பொருள்' 98. இயல்-2, ; கடிமம்-11. பக். (83–85) 91. திருவா. திருத்தோணோக்கம்-5