பக்கம்:சைவமும் தமிழும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சைவ சமய விளக்கு அங்கு வந்து பயன் கொடுக்கக் கூடியதாக இருப்பதால், மாயையின் சக்தியளவிற்குக் கன்மத்தின் சக்தியும் நிறைந்து நிற்றல் விளங்கும். "ஆணவம்’ என்ற மூல மலத் தின் சக்தி அளவில்லாதனவாகிய அனைத்து உயிர்களை யும் மறைத்து நிற்பதால் உயிரின் (சித்தின்) ஆற்றலள விற்கு ஆணவத்தின் சக்தியும் நிறைந்துள்ளமையை அறியலாம். ஆணவம், கன்மம், மாயை' என்னும் பாசங்களின் சக்தியாவும் சடசக்திகளாகும். இறைவனது சக்தி சிற் சக்தி; அறிவு வடிவமான சக்தி. தாயுமானவரும் சித்த மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே' என்று இதனைக் குறிப்பிடுவதைக் கண்டு மகிழலாம்.

  • பதி, பசு, பாசம்’ என்பவற்றில் முதலிரண்டின் சக்தி களும் சிற்சக்திகள்; அஃதாவது அறிவு வடிவமான சக்திகள். பாசத்தின் சக்தி சடசக்தி; அறிவற்ற சக்தி. பதி பசு ஆகியவற்றின் சக்திகளிலும் பசுவின் சக்தி தூல சக்தி; இதனைச் சிற்றறிவு என வழங்கலாம். அதாவது பசுவின் அறிவு, அஃது அடையும் பொருளின் தன்மையாக மாறிவிடும் தன்மையையும் உடையது. இதனைச் சித்தாந்தம் சார்ந்ததன் வண்ணமாதல' என்று பேசும். 'நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்" என்ற உவமை யால் இதனை வள்ளுவரும் விளக்கிப் போந்தார். இச் ஒற்றறிவு-பசுவின் அறிவு-பாசத்தால் மறைக்கக் கூடிய தாகின்றது.

பதியின் அறிவு இதற்கு நேர்மாறானது; அது தன்னை அடைந்த பொருள்களையெல்லாம் தன் வண்ணமாகச் செய்துவிடும் தன்மையது. இது தன்னை அறிவிப்ப தற்குப் பிறிதொரு பொருளை வேண்டாதது; தானே 94. டிெ தே சோமயானந்தம்-பாடல்கள் காண்க. 95. குறள்-452 (சிற்றினஞ் சேராமை)