பக்கம்:சைவமும் தமிழும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

箕 熊芝 சைவ சமய விளக்கு பண் னையும் ஓசையும் போலப் பழமதுவும் எண்ணும் சுவையும் போல் எங்குமாம் அண்ணல்தாள்" என்று கூறுவர். இதுவே அத்துவிதம்' ஆகும் என்பதையும் அறிந்து தெளிவாயாக. இதுகாறும் எழுதிய கடிதங்களில் 6-14 வரை இறைவனது பொதுவியல்புபற்றி ஒருவாறு விளக்கினேன். அடுத்து வரும் ஒரு சில கடிதங்களில் (15-17) இறைவனது உண்மை இயல்புபற்றி, அதாவது சொருப இலக்கணம் பற்றி, விளக்குவேன். - - அன்பன், கார்த்திகேயன். . 露5 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விழைகின்றேன். இறைவன் உயிர் களின்மீது கொள்ளும் கருணையினால் ஐந்தொழில் புரி யும் நிலையே அவனது பொதுவியல்பாகும் என்பதை நீ தெளிவாக அறிந்து கொண்டிருப்பாய். அவன் இந் தொழில் புரியாது தன் நிலையில் தான் நிற்றலே அவனது உண்மை இயல்பாகும். உண்மை இயல்பை சொரூப இலக் கணம் என்றும் வழங்குவர். ஐந்து தொழில்களைப் புரியு மிடத்து இறைவன் அவற்றிற்கேற்ற வடிவும் பெயரும் கொண்டு வரையறைப்பட்டுப் பலவாகி நிற்பன் என்பதை நீ நன்கு அறிவாய். அத்தொழில்களைப் புரியாமல் அவன் வாளா இருக்கும் போது வடிவு பெயர் முதலியன ஒன்றும் இன்றி எல்லையற்ற பொருளாக நிற்பன். இதுவே அவனது 99. சி. ஞா. போ. சூத் 2: அதி, !