பக்கம்:சைவமும் தமிழும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் i i 3 சொரூப நிலை; உண்மை இயல்பாகும் என்பதை அறிவா 枋莓令。 இறைவன் உயிர்களால் அறியப்படுபவனும் ஆல்லன்; அறியப்படாதவனும் அல்லன். இவ்விரண்டு பண்புகளும் அவனிடம் பொருந்தியுள்ளன. இதனை விளக்குவது இன்றியமையாததாகின்றது. உயிர்களால் அறியப்படா தன் இறைவன்' என்பதற்கு ஏனைய பசு பாசங்களை அறியும் முறையில் அறியப்படாதவன்' என்பது பொரு எாகும். அறியப்படுபவன்' என்பதற்கு வேறு முறையில் அறியப்படுபவன்’ என்பது பொருளாகும். இதனை மேலும் தெளிவிப்பேன். அருவம், உருவம், அருவுருவம்’ என்று மூவகையாகக் கூறிய பொருள்கள் யாவும் பாசப் பொருள் கள்; அவற்றை உயிர் கண் முதலிய புறக்கருவிகளையும் மனம் முதலிய அகக்கருவிகளையும் வாயிலாகக் கொண்டு அறியும். அங்ஙனம் அறியுமிடத்து உயிர் தன் உண்மை நிலையை அறியாமல், தனக்கு வேறாய அப்பொருள்களே தான் என்று மயங்கி அறியும் இவ்வறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம்' என்று வழங்கப்பெறும், சுட்டறிவு' எனப்படுவதும் இதுவே. அறிதற்கருவிகளாகிய பொறி களும், அவற்றால் அறியப்படும் பொருளாகிய புலன் களும் ஆகிய அனைத்தும் பாசமேயாதலின், பாசத்தைப் பற்றி நின்று, பாசத்தை அறியும் அறிவு பாச அறிவாம்’ என்பதை உளங்கொள்வாயாக. z: இங்ங்னம் பாசங்களையே தானாக மயங்கி அறிந்து வரும் உயிர் அறிவு முதிர முதிர கருவியும் பொருளும் ஆகிய அனைத்தும் சடப்பொருள் (அறிவில் பொருள்) ஆகும் என்பதன்றிச் சித்துப் பொருள் (அறிவுடைப் பொருள்) ஆகாமையையும் அறியும். மேலும், தான் சித்துப் பொருள் என்பதையும் அறிந்து தன்னை அவை அனைத்தினும் வேறாகவும் காணும். இங்ங்ணம் காணுங் கால் கருவி கரணங்களுக்குத் தான் முதல்வனாதலை சை, ச, வி.-8 -