பக்கம்:சைவமும் தமிழும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霍雷4 சைவ சமய விளக்கு

  • ணரும். இவ்வுணர்வு தன்னையே பதிப் பொருளாக மயங்கி அறியச் செய்யும். இந்த அறிவுதான் பசு அறிவு' அல்லது பசு ஞானம்' என்று வழங்கப்பெறும். உயிர் பாசத்துக்குட்பட்ட பசுவாதலால், பகவிற்குமேல் உள்ள பதிப் பொருளை அறிய மாட்டாது, பசுவையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவாம்’ என்பதைக் கருத்தி னில் இருத்துக.

இக்கருதினை மேலும் விளக்குவதற்கு திருநாவுக் கரசரின் திருமொழியைத் துணையாகக் கொள்ளலாம். மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லான்; ஒப்புடை யன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர் ஊரன் அல்லன் ஓர்உவமன் இல்லி, அப்படியும் அங்கிறமும் அவ்வண் ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இக்கிறத்தன் இவ்வண் ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொ னாதே.09 இறைவனின் சொரூப நிலையை விளக்குவதற்கு இத்திருத் தாண்டகம் நல்லதோர் எடுத்துக் காட்டு. இதிலுள்ள "இப்படியன்... காட்டொனாதே’ என்ற பகுதி இறைவன் பாசஞான பசு ஞானங்கட்கு அகப்படாதவன்’ என்பதே கருத்தாதலைக் கண்டு தெளிக. மேலும், உயிர்கள் பெரும்பான்மையும் அறிவது பாசங்களையே. அப்பாசங்கள் அருவம், உருவம், அருவு ருவம்' என்னும் மூன்று கூறுகளையுடையன. இம்முக்கூறு களில் ஒன்றிலும் இறைவனது தன்மை அகப்படாதது. இதனை வியந்தே எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ' 100. தேவாரம் கி. 97:10 101. டிெ 3.54:3