பக்கம்:சைவமும் தமிழும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霍雷6 சைவ சமய விளக்கு என்றிருக்குமாயின், அவன் உளன் என்பதும், அவனால் பயன் பெறுதலும் இல்லையாய் முடியும். ஆகவே, அவன் ஒருவகையில் அறியப்படுபவனே ஆவன். அஃதாவது, இறை வனது அருளையே தம் அறிவுக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு அறிதலாகும். இதுவே பதி ஞானம் எனப்படுவ தாகும். இனி, பதி ஞானம் இன்னதென்பதை விளக்குவேன். உயிர் தான் அறிவுடைப் பொருள் என்பதை அறிந்தவுடன், தானே அறிவாய் இல்லாது, அறிவிப்பதெர்ரு பொருளால் அறியும் அறிவாய் இருத்தலை உணரும். அவ்வகையில் உயிர் கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும் முடவனுக்குக் கோல்போல் நின்று உதவு வதனால் அறிந்து வருதல் கண்கூடு. ஆனால், அக்கருவிகள் தாம் அல்ல என்று அவற்றினின்றும் நீங்கிய பின்னர் உயிர் தன்னைத் தான் அறிகின்ற நிலை உண்டாகின்றது. இந் நிலையில் கருவிகள் இல்லையாய் நீங்குகின்றன. இந்நிலை யில் உயிருக்கு ஒர் அறிவு உண்டாகின்றது. இஃது எங்ங்ணம் என ஊன்றி நோக்கினால் தன் அறிவுக்கு அறிவாய் நிற்கும் பதிப் பொருளினது அறிவு புலனாவதாகும். இதுவே :பதி ஞானம்’ என்று வழங்கப்படுவது. ஒருவாறு புலப்பட்ட அப் பதி ஞானத்தை விடாது பற்றி நின்று, முன் கண்டு கழித்த பாச ஞானத்தில் செல்லாது நின்றால், அந்தப் பதி ஞானத்திற்குப் பதிப் பொருள் இனிது விளங்கு வதாகும். பதி ஞானத்தால் இறைவனை அறிவதையே சைவசமயாச்சாரியர்கள் அருட்கண்ணால் காணுதல்' எனக் கூறுவர். மேற் குறித்த அப்பரடிகளின் திருத்தாண்ட கத்தில் (6.97 : 1.0) காட்டொணாதே’ எனக் கூறப்பட்ட தாயினும், அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்' என்ற தொடர் காணப்படுகின்றதன்றோ? இதனால் அருளே கண்ணாகக் காணின் காணலாகும்; அக்கண் இல்லாதார்க்கு எவ்வகையிலும் காட்டொனாது என்பது தெளிவாகின்ற தன்றோ? பிறிதோர் இடத்திலும் இப் பெருமான்,