பக்கம்:சைவமும் தமிழும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 20 சைவ சமய விளக்கு நோக்க வேண்டும். அதுபோலவே, உயிர் சிவத்தை அடைய வேண்டுமாயின் அஃது அவனது சக்திவழியேதான் அடைய வேண்டும். அந்தச் சக்திதான் அருள்; அதனால் சக்திவழி அவனை அடைதலையே முன்னோர்கள், அவன் அருளே கண்ணாகக் காணுதல்’ என்றும் அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்றும் அருளிச் செய்துள்ளனர் என்பதையும் அறிந்து தெளிக. அன்பன், கார்த்திகேயன். ■6 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விளைவதாகுக. 'இறைவன் பாச ஞான பசு ஞானங்களால் அறியப்பட்டான் என்பதை யும் பசு ஞானத்தால் அறியப்படுவான்’ என்பதையும் ஐயமறத் தெளிந்திருப்பாய் எனக் கருதுகிறேன். இனி, அவற்றால் அறிய வேண்டுவன வேறு சிலவும் உள்ளன. அவற்றையும் ஈண்டு விளக்குவேன். இறைவனது உண்மை இயல்பை.சொரூப இலக்கணத்தைஉபநிடதங்கள் சத்து, சித்து, ஆனந்தம்’ என்று மூன்று தன்மைகளாக அடக்கிக்கூறும். இவற்றுள் சத்து என்பதற்கு 'உண்மை’ என்பது பொருள். உண்மை என்பது உளவாந் தன்மை என்றும் எல்லாப் பொருள்களும் உள்ளனவன்றி, இல்லாதது ஒன்றும் இல்லையாதலின்-அஃதாவது, "இல்லது வாராது; உள்ளது போகாது’ என்பது சற் காரியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சைவசித்தாந்தமாதலின் "பொருள்' எனப்படுவன யாவும் சத்தேயாகும். ஆகவே, பதியின் உண்மை இயல்பாகச் சொல்லப்படும் சத்து’ என்ப தற்கு நிலை பேறு அஃதாவது, என்றும் ஒரு படித்தாய் இருத்தல்’ என்றே பொருள் கொள்வார் பேரருட் செல்