பக்கம்:சைவமும் தமிழும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 2 வராகிய மெய்கண்டார். அவர் கருத்துப்படி சத்து’ என் பதை மெய் என்றுதான் கூறவேண்டும், மெய்ம்மை யாவது, என்றும் மாற்றமேயின்றி ஒரு படித்தாய் நிலைத்து நிற்கும் தன்மையாகும். திருவள்ளுவப் பெருந்தகையும் முதற்பொருளை மெய்ப்பொருள் ' என்றும், அதனையுணர் தலை மெய்யுணர்தல்' என்றும் கூறுவதை நினைவுகூர்க" செம்பொருள்' என்று அவர் குறிப்பிடுவதும் இப்பொருளில் தான் என்பதையும் சிந்தித்து அறிக. எனினும், உபநிடதங் களின் வழக்குபற்றி முதற்பொருளை உள்ளது" எனவும் கூறுகின்றார். மெய்ப்பொருள் செம்பொருள் என அவ் வறிஞர் பெருமான் கூறுவதை நோக்கி உள்ளது என்பதற்கு, மெய்கண்டார் கூறியவாறு, என்றும் ஒரு படித்தாய் உள்ளது என்பதே பொருளாகும் என்பது அவர்க்கும் கருத்தாகும் என்று தெளியலாம். 'சத்து’ என்பது என்றும் ஒரு படித்தால் உள்ளது” என்பதைத் தெளிந்தபின், மாறுதல் அடையும் பொருள்கள் அசத்து என்பது தானே விளங்கும். இதில் அசத்து' என்பதற்கு நிலையாமை" என்பது பொருளாகின்றது. ஆகவே, வள்ளுவப் பெருந்தகையும் நிலையாமை' 113. குறள்-35 மெய்ப்பொருள் இரண்வது அறிவு." 11. டிெ-அதி. 36. அதாவது பிறப்பு:வீடுகளையும், அவற் றின் காரணங்களையும் விபரீத ஐயங்களானன்றி உண்மையான் உணர்தல் (பரிமேலழகர்) இதனை வடநூலார் தத்துவ ஞானம்’ என்பர். 115. டிெ. 358. சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு". தோற்றக் கேடுகளின்மையின் நித்தமாய், நோன் ைம் கால் தன்னையொன்றும் கலத்தலின்மையின் துசய்தாய்த், தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் இரு தன்மைத்தாதல்பற்றி அதனைச் செம் பொருள் என்றார்" (பரிமேலழகர்). 115. அதி. 34