பக்கம்:சைவமும் தமிழும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 22 சைவ சமய விளக்கு என்னும் அதிகாரத்தில் என்பதை உலகம் அசத்தாலையே விளக்கினார் என்று அறிக. கில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை " என்னும் குறளில் அசத்தைச் சத்து என்று கருதி மயங்கும் மயக்கமே அஞ்ஞானம்’ என்று கூறப் பெற்றதை உய்த் துணர்க. சத்து’ என்ற சொல் உள்ளது” என்றே பொருள் பட்டு வேறு பொருள் படாமையின், எல்லாப் பொருளையும் உள்பொருளாகக் கொள்வார்க்கு அசத்து என்பதே இல் லாததாய் முடியும் என்பாரை நோக்கி, உண்டுபோல் இன்றாம் பண்பின் உலகினை அசத்தும் என்பர் 18 என்று அருணந்தி சிவாச்சாரியர் கூறுவதையும் அறியலாம். அதாவது, எல்லாப் பொருளும் உள்ளனவே யாயினும், சில பொருள்கள் முன் உள்ளனபோலக் காணப்பட்டுப் பின் ஆள்ள்னவாய் ஒழிதல்பற்றி அவற்றை அசத்து என்றும் கூறுவர் உயர்ந்தோர்’ என்பது இதன் கருத்தாதலை அறிக. "அசத்தாவது நிலையில்லாதது என்பதால், சத்தாவது நிலை பேறுடையது' என்பது தானே விளக்கமாகின்றது. மெய்யாவது நிலைபேறுடையது என்று மேலே கூறிய தனாலேயே பொய்யாவது நிலையில்லாதது" என்பதும் இனிது விளங்குகின்றதன்றோ? எனவே, சத்தென்பது மெய்ம்மை; அதாவது என்றும் ஒரு படித்தாயிருக்கும் பதி ஒன்றே சத்து என்பது முடிவாகின்றது. அடுத்து, சித்து என்பதை விளக்குவேன். சித்து’ என்பது அறிவு, அஃதாவது எல்லாவற்றையும், எப்பொழுதும், தானே அறியும் அறிவாகும். இதுசிற்றறிவினைக் குறியாமல் 117. குறள். 331 118. சித்தியார்.