பக்கம்:சைவமும் தமிழும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 123 பேரறிவினையே குறிக்கும் என்பதை நீ அறிதல் வேண்டும். ஏனெனில், ஒன்றை அறியுங்கால் மற்றொன்றை அறியாது ஒவ்வொன்றாய் அறிதலும் ஒருகால் அறிந்து மற்றொருகால் அறியாது நிற்றலும், தானே அறியாது பிறர் அறிவித்த பின் அறிதலும் அறிவு எனப்படாது. ஆதலின், இக்குறைபாடுகள் எல்லாம் உயிர்கட்கு உண்டு. அதனால், பொறியின்றி ஒன்றும் புணராத புக்திக்கு அறிவு என்ற பேர்கன்று அற : என்று கூறுவர் உமாபதி தேவ நாயனார். இதனை ஈண்டு நீ சிந்தித்து அறிக. இதனால் இறைவன் இக்குறைபாடு களுள் ஒன்றும் இல்லாத பேரறிவினையுடையவன் ஆகின் நான் என்பது தெளிவாகின்றது. இவனே சித்துப் பொருள்' ஆகின்றான். - இனி ஆனந்தம் என்பதனை விளக்குவேன். ஆனந்தம்'. என்பது இன்பம். அஃதாவது எல்லையற்ற இன்பத்துக்கு எல்லையாவன நிலையாமையும் துன்பமும் ஆகும். இவ் விரண்டும் இல்லாத இன்பமே இவண் குறிப்பிடுவது. இதுவே பேரின்பம் என்றும் நிரதிசயானந்தம் என்றும் குறிக்கப்பெறும். இதனை மெய்யறிவின்பம் என்றும் கூற லாம். ஆகவே சத்தாவும, சித்தாவும், ஆனந்தமாயும் நிற்றலே பதியினது உண்மை இயல்பாகின்றது. உண்மை இயல்புகளாக வேறு பல கூறப்படினும், அவையெல்லாம் இவற்றுள் அடங்குவனவாகும். இம் மூன்று சொற்களும் (சத்து + சித்து + ஆனந்தம்) ஒன்றாகச் சேரும் பொழுது சச்சிதானந்தம் ஆகின்றன. இதனால் இறைவனும் சச்சி தானந்தம் என்று வழங்கப்பெறுகின்றான் என்பதையும் அறிந்து தெளிக. உபநிடதங்கள் சத்து, சித்து ஆனந்தம், என மூன்றாகச் சுருங்கக் கூறுவதை சைவ ஆகமங்கள் ஆறாகவும் எட்டாக 119. திருவருட்பயன்-2.5