பக்கம்:சைவமும் தமிழும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviij விளைவாக 108 திருப்பதிகளைச் சேவிக்கும் வாய்ப்பை ஏற் படுத்திக் கொண்டேன். மலை நாட்டுத் திருப்பதிகள் (1971), தொண்டை நாட்டுத் திருப்பதிகள் (1973), பாண்டி நாட்டுத் திருப்பதிகள் (1977), வட நாட்டுத் திருப்பதிகள் (1980), சோழ நாட்டுத் திருப்பதிகளை (2 பகுதிகள்) (1981), என்ற ஆறு திருத்தலப் பயண நூல்களை எழுதி வெளியிட்டேன். முத்தி நெறி (1982) என்ற தலைப்பில் வைணவ-விசிட்டாத்வைத தத்துவத்தை வேங்கடவாணனுக்கு வேலப்பன் கடிதங் களாக வெளியிட்டேன். சில நோக்கில் நாலாயிரம் (1983) என்ற கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளிவந்தது. இவை யாவும் அநுபூதி நிலையில் வெளிவந்தவை. ஆய்வு மாணவர்களாக மூவரை ஏற்றேன்; அவர்களுள் ஒருவர் தாயுமானவர் பாடல்களை ஆய்வுக்கு தேர்ந் தெடுத்துக் கொண்டார். ஆய்வு மாணவர்கள் தேர்ந் 1தெடுக்கும். * தலைப்புகளை அவர்கட்குமுன் அத் தேலைப்புகள்பற்றி நான் முதலில் ஆய்ந்து விடுவேன்; பின் அவர்களோடு கலந்து ஆய்வேன். இப் பழக்கத்தை யுடையவனாதலால் சைவம்பற்றிய பல நூல்களைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினான்கு சாத்திரங் களை மேலோட்டமாகப் பயின்றேன். தாயுமானவர் ஆறும் சுத்தாத்துவிதத்தில் (பாடல்-283) தெளிவு ஏற்பட வேண்டுமல்லவா? இதன் காரணமாகச் சைவ சித்தாந்த ஒளி' என் மனத்தில் வீசத் தொடங்கியது; ஓரளவு தெளிவும் பிறந்தது. - . . . - நான் ஏகலைவனின் மரபுவழி வந்தவன். அறிவியல் கட்டதாரியாகிய என்னைத் தமிழன்னைஆட்கொண்டாள். உயர்நிலைப்பள்ளியிலும் கல்லூரியிலும் எனக்குத் தமிழ் கற்பித்த தமிழாசிரியர்கள் என்னிடம் தமிழ்பற்றிய அகத் தெழுச்சி (inspiration) எழக் காரணமாக இருந்தவர்கள். தமிழைத் தனியாகக் கற்று வித்துவான், எம்.ஏ., பட்டங்கள் பெற்றேன். எம்பெருமானாரை மானசீகமாக ஆசானாகக் கொண்டு வைணவத்தையும், மெய்கண்டாரை