பக்கம்:சைவமும் தமிழும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சைவ சமய விளக்கு வும் விரித்துக் கூறும். ஆறாகக் கூறப்படுவன தன்வயம், முற்றும் உணர்தல், இயற்கை உணர்வு, பேரருள், முடிவில் ஆற்றல், வரம்பில் இன்பம் என்பன. இவற்றுள் தன்வயம் சத்தென்பதைக் கூறியதாகும். வரம்பில் இன்பம் என்பது ஆனந்தத்தைக் கூறியதாகும். ஏனைய நான்கும் சித்து என்பதை விரித்துக் கூறியனவாகும். "ஆறு குணங்களை யுடையவன்’ (ஷாட் குண்யன்) என்று கூறப்படுவதையும் தெளிக. இனி, எட்டு எனப்படுவன: மேற் கூறியவற்றுடன் து.ாய்மை, இயல்பாகவே பாசங்கள் இன்மை என்னும் இரண்டும் கூட்டிச் சொல்லப்படுவனவாம். இவை இரண்டும் சத்து’ என்பதன் விரிவாகும். பாசத்தால் பற்றப்படாது தூயதாய் நிற்றல் நிலைபேறுடைய தன்மையினால் ஆவதாதலின் அவை சத்து" என்பதனுள் அடங்குவனவாயின என்பதை அறிக. இங்ங்ணம் எண் குணங்களும் மூன்றில் அடங்குதல் அறிக. திருவள்ளுவரும் இறைவன் எட்டு குணங்களை யுடையவன் என்பதை, . கோளில் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. ' என்ற குறளில் குறித்தருளினார். திருமுறைகளிலும் இறைவன் எட்டுக் குணங்களையுடையவனாகப் பேசப் பெறுகின்றான். எட்டுவான் குணத்தீசன் எம்மான் தன்னை: எட்டுக் கொலாம்.அவர் ஈறில் பெருங்குணம்,' என்று திருநாவுக்கரசரும், 120. குறள். 9 121. தேவாரம் 5.89:8 122. ഒു. 4.18:8