பக்கம்:சைவமும் தமிழும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 笛罗密 இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை இறையவனை மறையவனை எண்குணத்தி னானை : என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கூறுவதால் இதனை அறியலாம். இன்னும், பதியினது தன்னியல்பை இந்த இயலின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அல்கலை ஆகம வேதம் ' என்ற திருப்பாடலில் கூறுவன பலவும் மூன்று, ஆறு, எட்டு என்பனவற்றின் விரிவே பாதல் என்பதை அறிந்து தெளிக. - அன்பன், கார்த்திகேயன். కొమ్ల్లో அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விளைந்திடுக. தி இக்கடிதத்தில் இறைவனது அருட்குணங்களின் இன்றி யமையாத இயல்புகளாதலை விளக்குவேன். அருட் குணங்கள் தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசமின்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பிவின்பம் என்பனவாகும் என்பதை நீ நன்கு அறிவாய், இவை ஒவ்வொன்றும்பற்றி இயன்ற அளவு எடுத்துக்காட்டுகளுடன் தெளிவிப்பேன். தன்வயம் உடைமை : இது வடமொழியில் சுதந்திரத் துவம் (சுவதந்திரதை) என்று வழங்கப்பெறும். எவ் விடத்தும் தலைவராய் இருப்போர் அவர் பிறர் வழி பட்டு நடத்தற்குரிய தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவர் தாம் விரும்பும் செயல்களை 123. டிெ. 7.40:3 124. சிவப்பிரகாசம், 13