பக்கம்:சைவமும் தமிழும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2巻 சைவ சமய விளக்கு விரும்பியவாறே செய்தல் கூடும். இத்தன்மையை அப்பர் பெருமான், தாம்ஆர்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன்." என்று அருளிச் செய்துள்ளார். சிவபெருமானின் அற்புதக் செயல்கள் பலவும் இத்தலைமைத் தன்மையை விளக்கு வனவாகும். காமனை எரித்தது, நஞ்சை உண்டது, தாருகாவனத்து முனிவர்களின் கொடுஞ் செயலால் தாக் குண்ணாது நின்றது போன்ற வரலாறுகள் பலவும் அவன் பிறர் வயப்படாமையை எடுத்துக் காட்டும். காலனைக் காய்ந்தது, நான்முகனின் சிரங்கொய்தது, சிவபெருமானை விடுத்து அமுதம் பெறச் சென்ற தேவர்கட்கு ஆல கால விடம் கிடைத்தது போன்ற வரலாறுகள் பலவும் அவன் து இச்சைப்படியே யாவும் நிகழ்தலாகிய தன்வயம் 욕. 6-- மையை எடுத்துக் காட்டுவனவாகும். காலனும், திசைக் காவலனும், தேவர் பலரும் தம்வயம் உடையவரா காமையை இவ் வரலாறுகள் தெரிவிப்பன. இன்னும் காமனை எரித்தக் காலத்தில் திருமால் முதலிய பலரும் அவனைக் காக்கமாட்டாது ஒழிந்தமையும் அவர்களது தன் வயம் இன்மையைக் காட்டுவதாகும். இங்ங்னம் எவ்விடத்தும் யாவர்க்கும் அடிமைப்படாது எங்கும்தானே யாவரையும் அடிமை கொண்டு தன் இச்சைப்படி எல்வா வற்றையும் நடத்துபவனே யாவர்க்கும் மேலான தனிப் பெருந்தலைவனாகின்றான். இதுபற்றியே சிவபெருமானை "மகாதேவன் என்றும், பெரியோன் என்றும் தமிழ் நூல்கள் குறிக்கின்றன என்பதை உளங் கொள்க.. இதனால் பதிப் பொருளுக்கு முதலாவதாக இன்றியமையாது வேண்டப்படும் குணம் தன் வயமுடைமையாதல் என்பது தெளிவாகின்றதன்றோ? 125. தேவாரம். 6.98:1