பக்கம்:சைவமும் தமிழும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 127 தூய உடர்புடைமை ; இது வட மொழியில் விசுத்த தேகம் என்று வழங்கப்பெறும். இறைவன் தன்வயத்தால் செய்யும் செயல்கள் யாவற்றையும் உடம்பின்றியே செய்யக் கூடுமாயினும், பிறர் பொருட்டுச் சிலவற்றை உடம் பொடு செய்யவேண்டியவனாகின்றான். எனவே, தூய உடம்புடையனாதல் அடுத்து வேண்டப் படுவதா கின்றது. உடம்புடையனாக நிற்பது இறைவனுக்குப் பொதுவியல்பாயினும், அந்த உடம்பு உயிர்களின் உடம்பு. அவற்றின் வேறாதல் போல அவனின் வேறாதலின்றி ஒன்றேயாகும் என்பது கருத்தாதலின் உண்மை இயல்பா பாயிற்று. இயற்கை உணர்வினனாதல் : இதனை வட மொழி யாளர் அநாதி போதம் என வழங்குவர். தன்வயத்தனா யும் துய உடம்பினனாயும் நிற்கும் இறைவனுக்கு பிற பொருளால் வரும் அறிவு செயற்கையாதல் சிறிதும் பொருந்தாது. அரசர் முதலிய தலைவர்கட்கு ஐம் பொறிகள், மனம் முதலிய அந்தக்கரணங்களாலும், தாய் தந்தையர் ஆசிரியர், சூழ்ச்சித் துணைவர், கருமத் துணைவர் முதலாயினோராலும் அறிவு செயற்கையாக நிகழ்தல் கண் கூடு. இதனால் அவரெல்லாம் உண்மைத் தலைவராகாராயினர். இறைவனது அறிவு அவ்வாறின்றித் தானே விளங்குதலால் அவன் ஒருவனே உண்மைத் தலைவனாகின்றான் என்பதைத் தெளிக. இந்த இயற்கை யறிவு சுயம் பிரகாசம் எனவும் வழங்கப்படும். பிற பொருள்கள் விளக்க விளங்கும் அறிவு பரப்ரகாச மாகும்; அது சுதந்திரத்திற்கு இழுக்குமாகும். இதனால் அரசர்கள் சூழ்வார் கண்ணாக" (குறள்-453) ஒழுக வேண்டியுள்ளது. இறைவனோ அனைத்தையும் தன் சங்கற்பத்தினாலேயே செய்கின்றான். ஆகவே, இயற்கை உணர்வினனாகச் செயற்படுகின்றான் என்பதை உளங் கொள்க. - முற்றும் உணர்தல் : வட மொழியாளர் இதனைக் சர்வஞ்ஞதை என்பர். எனவே இது சர்வஞ்ஞத்துவம்’