பக்கம்:சைவமும் தமிழும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 28 சைவ சமய விளக்கு ஆகும். அறிவு செயற்கையாக நிகழாமல் இயற்கையாகவே விளங்கினும் அஃது ஒரு காலத்து ஒன்றையே அறியும் சிற்றறிவாய்விடின் பயனின்றாதலின், அனைத்தையும் எஞ்ஞான்றும் தன் இச்சைவழி நடத்த ஒருங்குணர் தலாகிய இஃது அடுத்து வேண்டப்படுவதாகின்றது. இம்முற்றுணர்வு இல்லாத காரணத்தாலேயே வேந்தர்கள் ஒன்றர்களையும் உரைசான்ற நூல்களையும் கண்ணாகக் (குறள்-581) கொள்ள வேண்டியவர்களாகின்றனர். இறைவனோ அனைத்தையும் ஏக காலத்தில் தானாகவே உணர்கின்றான். இயல்பாகவே பாகங்களின்மை: இது வடமொழியில் "கிராமயம் என்று வழங்கப்பெறும், ஆமயம்-நோய். அது பாசமாகும். நிராமயம் இயல்பாகவே பாசமின்மை யாகின்றது. இயற்கையாக விளங்குவதும், எல்லாவற்றை யும் ஒருங்குணர்வதுமான இறைவனது அறிவு பாசத்திற்கு மறுதலையாய நுண்ணிய தன்மையை உடைய தென் பதைக் குறிக்கும். இறைவனது அறிவைப் பாசம் எவ்வாற் றானும் மறைக்கும் ஆற்றலைப் பெற்றிலது என்பதை உணர்க. பேரருளுடைமை : இது வடமொழியில் அலுப்த சக்தி' என வழங்கப்பெறும். குறைவில்லாத ஆற்றல்’ என்பது இதன் சொற்பொருள். ஈண்டு ஆற்றல் என்பது அருளையே;. செயல் அடுத்துக் (ஏழாவதாக) கூறப்படுதலின் இங்ங்னம் கொள்ளப் பெற்றது. இறைவன் பேரருளுடைமையால், எல்லாவுயிர்களிடத்தும் எஞ்ஞான்றும் குறையாத கைம் மாறற்ற பெருங்கருணை அவனிடம் உண்டு என்பதைத் தெளிக. 'பால் நினைந்துாட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்ற மணிவாசகப் பெருமானின் திருவாக்கும், பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தது போன்ற-திருவிளை 128. திருவா. பிடித்தபத்து. 9