பக்கம்:சைவமும் தமிழும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் i 29

யாடல்களும் இக்குணம் இறைவனிடம் அமைந்துள்ளதை அரண் செய்கின்றன. .گشتحکیم முடிவிலாற்றலுடைமை : அகந்த சக்தி' என்பது இதன் வடமொழில் பெயர். ஈண்டு சக்தி' என்பது செயலாற்ற லைக் குறிக்கின்றது. அருளுடைமை பயன் தருவது, செய லாற்றல் வன்மையுடையதாக இருக்கும்போதுதான் என்பது உண்மையாதலின் பேரருளுடைமையின் பின் அமைந்துள்ளது. இஃது இறைவன் திரிபுரத்தை நகைத் தெரித்தது, இராவணனைத் தன் கால் விரலால் அடர்த் தது போன்ற வரலாறுகளால் தெளியப்படும். வரம்பிலின்பம் உடைமை : இது வடமொழியில் "திருப்தி என்று வழங்கப்பெறும். இஃது இறைவன் எவ் வாற்றானும் யாதொரு குறையும் இல்லாதவன் என்பதை உணர்த்தும், யாதானும் குறையுடைய வனாயின், மேற் குறிப்பிட்ட குணங்கள் பலவும் இல்லா தொழியும். ஆகவே, இஃது இறுதியாக அமைந்த குணமாயிற்று. இங்ங்னம் எண் குணங்களையுடையவன் இறைவனா தலால் அவனே எல்லாப் பொருளினும் பெரும் பொரு ளாதல் தெளியப்படுகின்றது. பெரும் பொருள் என்ப தனையே உபநிடதங்கள் பரப் பிரம்மம் எனக் கூறுகின்றன. பெரும் பொருள் எனவே, அகண்டிதப் பொருள் என்பது போதருகின்றது; தாயுமான அடிகளும் இப் பெரும் பொருளை, "பார்க்கும்.இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தம்' 127. தா. பா. பரிபூரணானந்தம் சை, ச, வி.-9