பக்கம்:சைவமும் தமிழும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

議響 அன்புநிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன், நலனே விளைந்திடுக. பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் பதி யாகிய கடவுளை இல்லையெனக் கூறுவோர் அப் பொருளை அடியோடு மறுக்கின்றனர். காரணம், அவன் கண்ணுக்கேயன்றிக் கருத்திற்கும் எட்டாதவனாக உள்ளி னன். ஆதலால் அவன் இருக்கின்றானோ? இல்லையோ? என்ற ஐயம் நம்மனோர்க்கு உண்டாகின்றது. அங்ங்ணம் உண்டாதல் இயல்பும் எளிதுமாகின்றது. ஆகவே, கடவுள் உண்மையை நிலைநாட்டுவதற்குப் பல சான்றுகள் சாத்தி ரங்களில் பகரப்பெறுகின்றன. ஆனால் பசுவாகிய உயிர் அவ்வாறில்லை; அது கண்ணுக்குப் புலனாகாவிடினும், கருத்திற்குப் புலனாவதாக ஏற்றுக்கொள்ளுகின்றோம். இதனைச் சிறிது விளக்குவது இன்றியமையாததா கின்றது. உயிர் உள்ளது; உயிர் போயிற்று; உயிர் வந்தது; உயிர் வாழ்கின்றது என்றாற்போல் உயிரை உலகின்கண் பல வகையில் தொட்ர்பு படுத்திக் கூறுதல் வழக்கமாக உள்ளது. இன்னும், இஃது உயிருள்ள பொருள்; இஃது உயிர் இல்லாத பொருள் என்று நாம் சொல்லி வருவதை யும் நீ அறிவாய். ஆகவே, உயிரை நாம் கண்ணால் கானா விடினும் கருத்தால் உணர்ந்து பலவகையாகப் பேசு கின்றோம் என்பது உனக்குத் தெரியும். ஆகையால்: 'இறைவன் இருக்கின்றானோ? இல்லையோ?” என்பன போன்ற ஐயம் உயிரைப்பற்றி ஒருவரிடையேயும் எழுவ தில்லை. ஆயின், உயிர் என்று நம்மால் உணரப்படுவது எது? அங்ங்ணம் உணரப்பட்டு அப்பெயரால் வழங்கப் பெறுவது எது? என்பதே நம்மிடையே எழும் ஐயப்பாடு.