பக்கம்:சைவமும் தமிழும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் இன்றெனக் கருளி யிருள்கடிங் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை கினைப்பற கினைந்தேன் நீயலாற் பிரிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாங் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுt யல்லை யன்றியொன் றில்லை யாருன்னை யறியகிற் பாரே." -மணிவாசகப் பெருமான் மக்களுக்கு மன அமைதியை நல்கி வருவது இறையது பவத்தோடு கூடிய சமய வாழ்க்கையாகும் என்பது அதுபவ உண்மை. எல்லாச் சமயங்கட்கும் இது பொருந்தும் பொதுவான உண்மையுமாகும். என் நல்வினைப் பயனால் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல்' குன்றின் மேலிட்ட விளக்காக எழுந்தருளியிருக்கும் திருப்பதியில் 17 யாண்டுகள் என் இறுதிக்காலக் கல்விப் பணியாற்றும் பேறு கிட்டியது. சூழ்நிலை சார்ந்ததன் வண்ணமாகச் செய்தது. நாலாயிரத் திவ்வியப் பிர பந்தத்தை ஆய்ந்து டாக்டர் பட்டம் பெற்றேன். இதன் 1. திருவா. கோயில் திருப்பதிகம்.7 2. பிஎச் டி. பட்டம் பெற்ற ஆங்கிலக் கட்டுரை : The Religion and Philosophy of Nalayira Divya Prapandham with Special , Refrenge to Nammalvar' srst w osoancesa பல்கலைக் கழகம் வெளியிட்டது. ij