பக்கம்:சைவமும் தமிழும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 34. சைவ சமய விளக்கு தெளிவாகக் கூறினால் உயிர் உண்மையை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். இன்னதுதான் உயிர்' என்பதை ஆராய்ந்து வரையறுப்பதில்தான் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. சமயவாதிகளிடையே பல்வேறு விதமாக இதுவே உயிர்; இதுவே உயிர்' என்று வரையறுத்துக் கூறுவதில்தான் கருத்து வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. ஆயினும், இச்சமயங்கள் பலவும் 'உயிர்' என்பதற்குக் கூறும் பொது இலக்கணம் அறிவுரு வாதல்’ என்பதாகும். எனவே, "உலகில் அறிவாய் நிற்பது எது?’ என்பதை வரையறுத்து உணர்வதே உயிராவது இது' என்பதை உணர்வதாக அமைகின்றது. அறிவை வரையறுத்துக் கூறுவதில்தான் பல்வேறு கொள்கைகள் எழுந்துள்ளன. அவற்றின் பொருந்தாமையை மறுப்பதையே உயிருண்மை கூறுவதாக அமைத்துக் கொள்கின்றார் மெய்கண்டார். சிவஞான போதம் மூன்றாம் சூத்திரத்தில் இதனைக் காணலாம். இதனை அடுத்த கடிதத்தில் தெளிவாக்குவேன். அதற்குப் முன் உயிரைப்பற்றிச் சைவ சித்தாந்தம் கூறுவதுைச் சுருக்க மாக எடுத்துக் காட்டுவேன். உயிர் என்பது அறிவுடையது; ஆயினும் இறைவனது அறிவுபோன்று பேரறிவுடைய தாகாது; அது சிற்றறிவுடையதாய் உள்ள பொருள்:இதுவே சைவ சித்தந்தம் கூறும் உயிரைப்பற்றிய சுருக்க மான கொள்கையாகும். இத்துடன் இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன். அன்பன், கார்த்திகேயன். 雷登 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விழைகின்றேன். உயிரின் இயல்புபற்றிப் பலரும் பலவகையிற் கூறும் இகாள்கைகளை யெல்லாம் சைவ சித் தாந்தம் பொறுமை