பக்கம்:சைவமும் தமிழும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் i 35 யுடன் கேட்டு உரிய மதிப்புத் தந்து நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்கின்றது, பொருந்தாதவற்றைக் காரணம் காட்டி விலக்குகின்றது. பிறகு இவற்றிற்கெல்லாம் அப்பாற் பட்ட சிறந்த புதிய பொருத்தம்ான கொள்கையின் அறிவு நெறிக்கு இணங்க ஆராய்ந்து காட்டி நிறுவுகின்றது. இது தான் மெய்கண்ட நூல்கள் நுவலும் சைவ சித்தாந்தம் என் னும் தனிப் பெருங் கொள்கையாகும். இத்தத்துவம் ஆன்ம இலக்கணம்’பற்றிப் பலர் கூறும் கருத்துகளை எங்ஙனம் ஆய்ந்து விலக்குகின்றது என்பதை ஒன்றிரண்டு கடிதங் களில் தெரிவிப்பேன். உடம்பு உயிராகாமை : மக்கள் முதல் தாவரம் ஈறாகக் காணப்படுகின்ற பிறவிகள் பலவற்றிலும் அவற்றினது அறிவு கண்ணிற்குப் புலனாகும் பரு உடம்பிற்கு (துல தேகத்திற்கு) வேறாகக் காணப்படாமையால், பரு உடம்பே உயிர் அல்லது ஆன்மா என்பர் தேகான்ம வாதிகள், மேலும், அவர்கள் உடம்பு பூதங்களின் காரியமேயாத லானும் பூதங்கள் யாவும் சடமே யாதலானும் சடப் பொருளிலிருந்து அறிவு தோன்றாது என்பதில்லை : வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு என்ற மூன்று பொருள்கள் ஒன்றிலும் சிவப்பு நிறம் இல்லை. ஆயினும், இம்மூன்றும் ஒன்றுபடும் காலத்தில் முன்பு இல்லாத சிவப்புநிறம் தோன்றுகின்றது. அதுபோலவே, பூதங்கள் தனித்தனியாய் இருக்கும்பொழுது சடமாய் இருப்பினும், அவை ஒன்று கூடும்பொழுது முன்பு இல்லாத ஒர் அறிவு தோன்றும் என அவர்கள் வாதிப்பர். ஆனால் சற்காரியவாதம், காரண காரிய இயைபு முதலிய வழிகளில் அவர்கட்கு உண்மையை விளக்குதல் அரிது என்னும் கருத்தால் வேறு ஒர் எளிய மு ைற யி ல் அவர்களது கொள்கையை மறுப்பர் மெய்கண்டார். அவர் கூறுவது: ஒவ்வொருவனும் தனது ஊர், தனது வீடு முதலியவற்றை எனது ஊர், எனது வீடு' என்று கூறுதல் போலவே, தனது உடம்பையும்."எனது உடம்பு’