பக்கம்:சைவமும் தமிழும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$36 சைவ சமய விளக்கு என்று தனக்கு வேறாகக் கூறுதல் அல்லது யான் உடம்பு’ என்று உடம்பையே தானாகக் கூறுதல் இல்லை. இதனால் ஒவ்வொருவனும் தனது உடம்பிற்கு வேறாகத் தான் இருப்பது புலனாவதால் தான் அல்லது யான் எனப்படும் உயிர் காணப்படுகின்ற பரு உடம்பின் வேறேயாகும் என்று தெளிவிப்பர். இதற்கும் ஒரு தடையை நிகழ்த்துவர் தேகான்ம வாதிகள். எனது உடம்பு’ என்பதை எனது உயிர்', "எனது அறிவு' என்பனபோல ஒற்றுமைக் கிழமைப் பொருளாகக் கொள்ளல் வேண்டுமேயன்றி எனது ஊர்”, எனது வீடு' என்பனபோல் வேற்றுமைக் கிழமைப் பொருளாகக் கொள்ளலாகாது; மேலும் யான் பருத்தேன்; நீ இளைத் தாய்; அவன் கறுப்பன்; இவன் சிவப்பன் என்றாற் போலக் கூறுவனவற்றில் 'யான், நீ, அவன் முதலியவை உடம்பைக் குறித்து நிற்றல் வெளிப்படையன்றோ? என்பதே அத் தடை. அதற்குத் மெய்கண்டார் விடை கூறுவார். அவர் கூறுவது: "எனது உயிர், எனது அறிவு" என்பன சிறுபான்மை அவ்வாறு வழங்குவதாகும். எனது கை, எனது கால், எனது தலை’ என்றாற்போல்வன. "எனது ஊர் எனது வீடு, எனது மாடு, என்றாற் போலப் பெரும்பான்மையாக வரும் வேற்றுமைக் கிழமைப் பொருள்களேயாகும். தனக்கு வேறாகவுள்ள பொருள்களையும் அவற்றின் மீதுள்ள பற்றுக் காரணமாகத் தானாக மதித்தல் உண்டு என்பதை, ஒருவன் தனது ஆடை அணிகலன் முதலியவற்றையும் மனைவி மக்கள் முதலியோரையும் அவ்வாறு மதித்து அப் பொருளை உயிராக நினைக்கு மாற்றால் அறியலாம்; 'யான் பருத்தேன். 'யான் இளைத்தேன்’ என்றாற் போலக் கூறுவனவும் அங்ங்னம் மயங்கிக் கூறுவனவேயாகும். இதற்கு மேலும் சில விளக்கங்களைக் கூறுவர் அருணந்தி சிவாச்சாரியார். அவர் கூறுவது: உடம்பே அறிவுடைய உயிர் எனின், உடம்பு பிணமாகிவிட்ட பொழுது அதில் அறிவு காணப்படாததற்குக் காரணம்