பக்கம்:சைவமும் தமிழும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சைவ சமய விளக்கு மெய் கண்டார் மறுக்கின்றார். அவர் கூறுவது: "நுண் ணுடம்பே உயிராயின் நாம் காண்கின்ற கனவுகள் யாவும் விழித்தபின் முன்பு கண்டது போலவே தெளிவாக அறிந்து சொல்லுதல் வேண்டும். ஏனெனில், கனவு கண்ட தும், விழித்தபின் பருவுடம்பு வழியாகப் பிறவற்றை அறிவ தும் ஒரு பொருளே யாதலின அவ்விடத்து மாறுதல் உண்டாவதற்குக் காரணம் இல்லை. அதாவது இல்லத்தில் உணவு கொண்ட ஒருவன் உடனே வெளியில் வருவானா யின், உண்ட உணவின் தன்மைகள் பலவற்றையும் அவன் தெளிவாக அறிந்து சொல்ல முடிகின்றது. அதுபோலவே, முதல் நாள் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மறுநாள் மறதி யின்றித் தெளிவாகச் சொல்ல முடிகின்றது. இங்ங்னமே இரவில் கண்ட கனவை மறுநாள் காலையில் மறவாது நினைத்திருந்து சொல்லுதல் அநுபவத்தில் இல்லை. கனவு கண்டு கொண்டே இருப்பவன் உடனே விழித்துக் கொண் டாலும், அந்தக் கனவு அவனுக்குத் தெளிவாக விளங் காமல் போகின்றது. கனவு கண்டதையே அடியோடு மறந்தும் விடுகின்றான். இதற்குக் காரணம், புறவுடம்பில் நின்று நனவு நிலையில் நிகழ்வனவற்றை அறிவதும், அகவுடம்பில் நின்று கனவு நிலையில் நிகழ்வனவற்றை அறிவதும் ஆகிய பொருள் இவ்விரண்டு உடம் பிற்கும் வேறாய் இருப்பதேயாகும். அஃது அங்ஙனம் சூக்கும உடம்பிற்கு வேறாய் இருப்பதால் அதனைவிட்டு நனவு நிலையில் புறவுடம்பில் வந்த காலத்தில் முன் வேறு உடம்பில் நின்று அறிந்ததை மறப்பதாகின்றது; அல்லது தெளிவின்றி ஒருவாறு நினைப்பதாகின்றது. ஆகவே நுண்ணுடம்பு ஆன்மாவன்று. அது நுண்ணுடம்பின் வேறு” என்பது. அந்தக்கரணங்கள் உயிராகாமை : மன்ம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கையும் ஆன்மா என்பர் ,ே அந்தக் கரணம்-உட்கருவி,