பக்கம்:சைவமும் தமிழும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் i 33 அந்தக்கரனான்மவாதிகள். இக்கொள்கையையும் மறுப்பர் மெய் கண்டார். அவர் கூறுவது: "ஐம்பொறிகள் அறிந்த புலனைச் சித்தம் சிந்தித்தறியும். மனம் அதனைப் பற்றிச் சங்கற்ப விகற்பம் செய்யும். ஆங்காரம் ஒருப்பட்டு எழும். புத்தி நிச்சயிக்கும். இங்கும் ஒன்று செய்யும் செயலை மற்றொன்று செய்ய அறியாது’ என்னும் மறுப்பே போதிய தாகும். ஆகவே, அந்தக்கரணங்கள் ஆன்மா அல்ல; ஆன்மா அவற்றின் வேறு’ என்பது. பிராணவாயு உயிராகாமை: பிராண வாயுவையே ஆன்மா என்று கூறுவர் பிராணான்டி வாதிகள், இதற்கும் மறுப்பு உண்டு. அம்மறுப்பு: உறக்கம் விழிப்பு என்ற இருதிற நிலைகளிலும் பிராணவாயு ஒரு தன்மையாகவே இயங்கிக் கொண்டு நிற்கின்றது; ஆயினும் உடம்புக்கு விழிப்பு நிலை யில் மட்டுமே இன்ப துன்ப நுகர்ச்சி உள்ளது. உறக்க நிலையில் அவை இல்லை. ஒரு தன்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் பிராணவாயு இவ் வேறு பாட்டுக்குக் காரணமாதல் அமையாது. மேலும், காற்று அறிவில்லாத சடப் பொருள் என்பது எல்லோர்க்கும் உடன்பாடாக உள்ளது. சடப் பொருளை அறிவுடைமை எனக் கூறுதல் முருட்டுவாதமாகும். ஆகவே சுகமாகத் துரங்கினேன்’ என்று சொல்லத் தக்க அநுபவமும் பிராணவாயு அல்லாத வேறொன்றினுடையது. அதுவே ஆன்மா என்ற வேறொரு பொருளாகும்’ என்பது. கருவிக் கூட்டம் உயிராகாமை , ஐம்பொறிகள் முதலாகக் காட்சிப் பொருளாய் விளங்கும் கருவிகளும், மனம் முதலாகிய கருத்துப் பொருளாய் விளங்கும் கருவி களும் ஆகிய அனைத்தும் கூடிய தொகுதியே உயிர்' என்பர் சமுதாய ஆன்மவாதிகள். இங்ங்ணம் திரண்டு நிற்கும் பொருள்கள் அனைத்தும் மாயா காரியப் பொருள் களேயன்றி ஒன்றேனும் சித்துப் பொருளாகா. இவை ஒன்றாகத் திரண்டிருக்கும்பொழுது உடம்பு என்ற பெய.