பக்கம்:சைவமும் தமிழும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சைவ சமய விளக்கு ரால் வழங்கப்பெறுதலன்றி உயிர் என்று வழங்கப்பெறுவ தில்லை. உடம்பு', 'உயிர்” என்னும் சொற்கள் வேறு வேறு பொருளைக் குறிக்க அமைந்த சொற்கள். 'உடம்பு’ என்ற சொல்லால் குறிக்கப்பெறும் பொருளை உயிர்’ என்னும் சொல்லால் குறிக்கப்பெறும் பொருளாகக் கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருந்தாது. சடப் பொருள்களின்றும் எவ்வாற்றானும் சித்துப் பொருள் தோன்ற மாட்டாது. ஆகவே, அனைத்துக் கருவிகளும் ஒருங்கு கூடி நிற்பினும் அவற்றிலிருந்து அறிவு தோன்று மாறில்லை, அத்தொகுதிகளிடமாக நிகழும் அறிவு அவை அனைத்திற்கும் வேறானதேயன்றி அவற்றில் உள்ளதன்று. அதனால் அறிவுப் பொருளாகிய உயிர் அத்தொகுதியின் வேறானது. ஆகவே, நன்கு உற்று நோக்கினால் ஒளி மறைந்த கண்ணுக்கு உருவத்தை அறிய உதவுகின்ற கண்ணாடி போல், அறிவை இழந்த உயிருக்குப் பொருள்களை அறிய உதவுகின்ற கருவியே உடம்பாவ தன்றி, உடம்பு எவ்வகையிலுல் உயிராகாது' என்பது மெய்கண்டாரின் மறுப்பாகும். உயிர் சூனியம் ஆகாமை : இனி. இவற்றையெல்லாம் நோக்கிய பெளத்தர்கள் அறிவு என்பது முதலில் பொது வாகப் பார்க்கும்பொழுது ஏதோ இருப்பது போலத் தோன்றினாலும், நன்கு துருவி ஆராயும்பொழுது அஃது' இன்னது என்று மெய்ப்பிக்க முடியாததாய் உள்ளது. ஆகவே, உயிர் என்பது ஒரு சூனியப் பொருளே' என் கினறனர். சூனியம்’ என்பதற்கு அவர்கள் கொள்ளும் பொருள் இல்லது மன்றி உள்ளது மன்றி இருப்பது’ என்பது. இதற்கு மெய்கண்டார் கூறும் மறுப்பு: 'உயிர் சூனியமாயின் உயிர் சூனியமே என்று உணர்வதும் உணர்ந்து சூனியம்தான் உயிர் எனப்படுகின்றது என்று பிறர்க்கு உணர்த்துவதும் ஆகிய அந்த அறிவு உளதோ? இலதோ? இலது எனின், தான் உணர்ந்தும், தான் உணர்ந்ததைப் பிறர்க்கு உணர்த்தியும் நிற்கும் அறிவை 'இலது என்பது, தன்னைப் பெற்ற தாயை ஒருவன் என்