பக்கம்:சைவமும் தமிழும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதி இயல் 霍4镇 தாய் மலடி எனக் கூறுவதோ டொக்கும். ஆதலின் அந்த அறிவு உள்ளதேயாம்; அதனால் அந்த அறிவுதான் உயிர் என்று இனிது நிறுவப்படும். ஆகவே சூனிய வாதிகளின் கூற்றும் சிறிதும் பொருந்தாதாகின்றது” என்பது. உயிர் பரப்பிரம்மம் ஆகாமை : பரப்பிரம்மம் ஒன்றே உள்ளது; இரண்டாவது பொருள் இல்லை என்னும் கொள்கையுடையவர்கள் ஏகான்மவாதிகள். ஆகையால் அவர்கள் அறிவு வடிவாய் உள்ளது பரப்பிரம்மமே; அதுவானத்திலுள்ள ஒரு சந்திரன் பூமியிலுள்ள பல நீர் நிலைகளில் பல சந்திரர்களாய்ப் பிரதிபிப்பதுபோல, மாயையின் காரியமாகிய பல உடம்புகளில் பல சிவான் மாக்களாகப் பிரதிபிம்பிக்கின்றது. ஆகவே, உயிர் பரப் பிரம்மமே யன்றி வேறில்லை’ எனக் கூறுவர். இவர்கள் கூற்றின் பொருந்தாமையையும் மெய்கண்டர்ர் தெளிவாக விளக்குவார். - அவர் கூறுவது: பரப்பிரம்மம் அறிவே வடிவானது: என்பதை ஒப்புக் கொண்டால், அதற்கு அறியாமையும் உண்டு என்று கூறுதல் மாறுகோள் உரையாகும். ஏனெனில், சூரியன் ஒளியே வடிவானவன்” என்று சொல்வி விட்டு, அதே சமயத்தில் அவனிடத்தில் இருளும் உண்டு’ என்பது எப்படிப் பொருந்தும்? இதுபோலத்தான் 'அறிவே வடிவமான பரப்பிரம்மம் அறியாமையையும் உடைய தாகும்’ என்று கூறுதலும் பொருந்தாது. உலகில் உடம்பு தோறும் காணப்படுகின்ற உயிர்கள் பருவுடம்பாயும் நுண்ணுடம்பாயும் நிற்கும் கருவிகள் முழுவதும் செய லற்றிருக்கும் பேருறக்கத்தில், ஒன்றும் அறியாத பேர் அறியாமையில் அழுந்தியும், அக்கருவிகள் எந்த அளவிற்குச் செயற்படுகின்றனவோ அந்த அளவிற்கு அறிவைப் பெற்றும் நிற்கின்றன. உயிர்களை ஒர் அறிவுயிர் ஈரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் வரையிலும் பகுத்துக் கூறுதல் அவற்றின் உடம்புவகைபற்றியேயாகும். ஆகவே, உயிர்

          • $3*&

4. இவர்களை அத்வைதிகள் என்றும் கூறுவர்.