பக்கம்:சைவமும் தமிழும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i42 சைவ சமய விளக்கு இயற்கையில் அறியாமையை உடையதாய், பலவகை உடம்புகள் அவ்வறியாமையைச் சிறிது சிறிது நீக்கி அறிவை உண்டாக்கிய பின்னே அறியும் தன்மை உடையனவாதல் தெளிவு. ஆகவே, பரம்பிரம்மமே இவ்வாறு இயற்கையில் அறியாமையுடையதாய் நின்று, பின் கருவிகள் வந்து அறிவைத் தர அதனைப் பெறும் என்று கூறின், அது, சூரியன் ஒளியைப் பெற்று விளங்குதல், உலகில் ஏற்றப் படும் சிறிய விளக்குகளினாலேயாம்' என்று கூறுவதனோ டொக்கும். சந்திரன், சூரியன் பூமியில் உள்ள நீர் நிலைகளில் பிரதிபலிக்குமாயின், அவ்விடத்திலும் அவை ஒளியுடைய தாய் இருளை ஒட்டுவதல்லது, இருளில் மூழ்குவதில்லை. அதுபோல, பரப்பிரம்மமே மாயையில் பிரதிபலிக்குமாயின் அவ்விடத்திலும் அது மாயையை ஒழிக்குமேயன்றி அதனால் மயங்கி விடாது. ஆகவே, மாயையில் அகப்பட்டு மயங்கி நிற்கின்ற உயிரை, அறிவே சொரூபமான பரப்பிரம்மத் தின் பிரதிபிம்பம்’ எனக் கூறுதல் அறிவுடைமை ஆகாது; அஃது அறியாமை நிறைந்த கூற்றாகும்”. மேலும்,"இரவியோ மதியோ நீரில் பிரதிபலிக்குமாயின் அவ்விடத்திலும் அவை இரவியாகவும் மதியாகவும் தோன்று மேயன்றி பிறகோள்களாகவும், விண்மீன்களாகவும் தோன்ற மாட்டா. அதுபோல, பரப்பிரம்மமே பல உடம்பு களில் பிரதிபலித்து நிற்குமாயின், அவ்விடங்களிலும் அது பரப்பிரம்மமாய் நிற்குமேயன்றி, சீவான்மாக்களாய் நில்லாது. ஆகவே, சீவான்மாக்கள், பரமான்மாவாகிய பரப்பிரம்மத்தின் பிரதி பலனாகக் கூறுதல் எவ்விதம் பொருந்தும்?” இன்னும், 'உடம்புதோறும் காணப்படுகின்ற சீவான் மாக்கள், அவ்வுடற் கருவிகள் செயற்படும்பொழுது அறிவைப் பெறுகின்றன. அப்பொழுதும் பிற பொருள் களை அவ்வாறு அறிவனவன்றித் தம் சொரூபத்தைத் தாம் அறிவதில்லை. தம் சொரூபத்தை ஓர் ஆசிரியர் வந்து அறி விக்கவே அறிகின்றன. தம் சொரூபத்தை அறியாது பிற