பக்கம்:சைவமும் தமிழும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix ஆசானாகக் கொண்டு சைவத்தையும் அணுகினேன். இரண்டிலும் ஒரளவு தெளிவு பிறந்தது. இத்தகைய தெளிவின் பயனாகவே சைவ சமய விளக்கு என்ற இந் நூல் கண்ணுதலப்பனுக்குக் கார்த்திகேயன் எழுதும் கடிதங்களாக வெளிவருகின்றது. கருத்துகளைத் தெளி வாக உணர்த்துவதற்கு கடித உத்தி கைகொடுத்து உதவு கின்றது என்பது என் கருத்து. பாணபத்திரனுக்கு உதவ வேண்டுமென்று சேரமான பெருமாள் நாயனாருக்கு ஆலவாய் சோமசுந்தரக் கடவுள் எழுதிய திருமுகப் பாசுரத்தை ஈண்டு நினைத்தல் தகும். இந்தப் பெரிய நூல் தமிழ் கூறு நல்லுலகத்தில் நடை யாடும் பேறு கிட்டுமோ என்ற ஐயமும் அச்சமும் என்பால் எழுந்தன. இந்நிலையில் ஏழுமலையான் திருவருள் பாலித்தான். திருவேங்கடத் திருப்பதிக்கு முருகன் rேத்திர பாலகனாயிருப்பதாலும் இந்நூல் கார்த்திகேயன் கடிதங்களா யிருப்பதாலும் எம் பெருருான் ஏழுமலையான் திருமலை. திருப்பதி தேவஸ்தானத்தின்மூலம், நிதி உதவினான். இதனால் இந்நூல் தமிழ்கூறு நல்லுலகில் உலா வரும் வாய்ப்பு கிட்டியது. இந்தப் பெருமான் திருவருளாலே என்னுடைய oேllected Papers என்ற ஆங்கில நூலும் நிதி உதவி பெற்று வெளி வர இருக்கின்றது. இந்த அப்பன் கருணையினால் *6@6Jö项rá具 உரைவளம்-ஐதிகங்களும் இதிகாசங்களும் என்ற பெரு நூலும் வெளி வரும் என்ற நம்பிக்கை என்றும் என்பால் உண்டு. நிதி உதவிய தேவஸ் தானத்தாருக்கு குறிப்பாக திரு. K. சுப்பராவ் அவர்கட்கு (சப்தகிரி ஆசிரியர்) என் அன்பு கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இந்நூலைச் செவ்விய முறையில் அழகுற அச்சிட்டு உதவிய மூவேந்தர் அச்சக உரிமையாளர் திரு 3. திருவுரங்கம் பெரிய கோயிலின் rேத்திர பாலகருள் விநாயகரும் ஒருவர் எதல் போல. -