பக்கம்:சைவமும் தமிழும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懒本车 சைவ சமய விளக்கு இவ்வாறு பரப்பிரம்மமே உயிர் என்பாரது கூற்றுச் சிறிதும் பொருந்தாமையைத் தெளிவுறுத்துவர். இவ்வாறு உயிர்பற்றிய பல்லோர் கூற்றையும் அன்று, அன்று’ என மறுத்து உயிர்பற்றிய தம் கொள்கையைக் கூறு கின்றார் மெய்க்ண்டார். இதனை அடுத்தக் கடிதத்தில் தெரிவிப்பேன். அன்பன், கார்த்திகேயன். 2@ அன்பு நிறைந்த கண்ணுதலிப்பனுக்கு, நலன், நலனே விளைந்திடுக, இக் கடிதத்தில் உயிர்பற்றிய மெய் கண்டாரின் கொள்கையை விளக்குவேன். ஒரு பொருளை அஃது உண்டோ? இல்லையோ?” என்று ஆராய்வதற்கு முன்னர் அதன் இயல்பு இன்னது என்பதை ஒரு சிறிதேனும் உணர் தல் வேண்டும். அறியும் த்ன்மை உடையது உயிர்' என் பதை முன்பு பல இடத்தும் கூறியுள்ளேன். இது பொது வாக யாவராலும் கொள்ளப்படுவது. இனி, உயிர் அறிவித்தால் அறியக்கூடியது: அறியுமிடத்தும் ஒவ்வொன் றாகவே அறிவது; அறிவதையும் விட்டுவிட்டே அறிவது; அங்ங்ணம் அறியுங்கால் அறியப்பட்ட பொருளில் அழுந்தி அதுவேயாய் நின்று அறிவது-ஆகிய இயல்பினையுடைய அறிவுப் பொருளே உயிர் அல்லது ஆன்மாவாகும் என்பதே மெய் கண்டார் கூறுவது. அன்றன் றெனகின் றனைத்தும்விட் டஞ்செழுத்தாய் கின்றொன் றுளததுவே நீ யனைத்தும்-கின்றின்று தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை மீயல்லை தற்பரமும் அல்லை தனி." - தர்ப்பணம்-கண்ணாடி)