பக்கம்:சைவமும் தமிழும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 145 அறிந்தும் அறிவதே யாயும் அறியாது அறிந்ததையும் விட்டங் கடங்கி-அறிந்தது எது? அறிவும் அன்றாகும்; மெய்கண்டான் ஒன்றின் அது அது தான் என்னும் அகம்." என்ற வெண்பாக்களால் இது தெளிவாகும். இவற்றால் உயிர் என்பது தானே அறிந்தும் அறிவித் தும் நிற்பதாகிய பதியும் அன்று அறிவித்தாலும் அறிய மாட்டாத பாசமும் அன்று; அறிவித்தால் அறியும் அறிவு டைய ஓர் இடை நிலைப் பொருள் என்பது மேலும் தெளி வாகும். அறிவே வடிவாகிய பதிப்பொருள் சித்து’ என்று சொல்லப்படுவதை நீ அறிவாய். அறிவே இல்லாத சடப் பொருள்களாகிய பாசங்கள் அசித்து’ என வழங்கப் பெறுவதும் உனக்குத் தெரியும். ஆதலால் அவ்விரண்டிற் கும் இடைப்பட்டதாகிய பசு சிதசித்து' என்று மொழியப் படும். சித்தாகிய பதி, என்றும் ஒரு பெற்றியதாய் இருத் தல்பற்றி சத்து' என்றும், அசித்தாகிய பாசங்கள் நிலை மாற்றத்தை அடைதல்பற்றி அசத்து' என்றும் சொல்லப் படுதலால் இடைப்பட்ட பொருளாகிய பசு சதசத்து' என்றும் சொல்லப்படும் என்பதையும் அறிவாயாக. இவற்றால் பதி, சித்து; பாசம், அசித்து; பசு, சிதசித்து என்பதும் தெளியப்படும். மேலும் பதி, சத்து; பாசம், அசத்து; உயிர்-டச்சு, சதசத்து என்பதும் பெறப்படும் என்பதையும் உளங்கொள்வாயாக. தாயுமான் அடிகளின், அறியாமை சாரின் அதுவாய், அறிவாம் நெறியான போததுவாய் கிற்கும்-குறியால் சதசத் தருளுணர்த்தத் தான்உணரா கின்ற விதமுற் றறிவெனும்பேர் மெய்." - என்ற திருப்பாடலும் இக்கருத்தின்ை அரணாக அமைந்து விளக்குதல் கண்டு தெளிக. - 6. டிெ சூத் 3 அதி-6 7. தா. பா. உடல் பொய் புறவுய-22 சை. ச. வி.-10