பக்கம்:சைவமும் தமிழும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$46 சைவ சமய விளக்கு ஈண்டு இரண்டு மாறுபட்ட தன்மைகள் ஒரு பொருளின் கண் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை என்பதையும் தெளிவிப்பேன். சிதசித்து’ என்பதற்கு சித்துத் தன்மை,’ அசித்துத் தன்மை என்ற இரு தன்மையுடையது என்பது பொருளன்று; இரண்டிற்கும் இடைப்பட்ட மற்றொரு தன்மை என்பதே பொருளாகும். அதாவது, சித்துப் பொருளை நோக்க அசித்து என்னும் படியும், அசித்துப் பொருளை நோக்க சித்து’ என்னும் படியும் நின்று, சித்தோடு கூடிச் சித்தாயும், ஆசித்தோடு கூடி அசித்தாயும் நிற்பதாய ஒரு தன்மை என்பதே பொரு ளாகும் என்பதை உணர்வாயாக. ஏனையவற்றிற்கும் இவ்வாறே பொருள் கொள்ளல் வேண்டும். உயிர் சதசத்து என்பதற்கு சத்தும் அன்றாய், அசத்தும் அன்றாய், சத்தை நோக்க அசத்தாயும், அசத்தை நோக்கச் சத்தாயும் நின்று, சத்தோடு கூடிச் சத்தாயும், அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்பதொரு தன்மையாகும் என்பதையும் அறிந்து தெளிவாயாக. உயிர் சூக்குமா குக்குமப் பொருள்: என்பதும் இவ்வாறே யாகும். இதனால் உயிரை அருவப் பொருள் என்றோ, உருவப் பொருள் என்றோ, இரு தன்மைகளையுடைய பொருள் என்றோ கூறுதல் பொருந் தாது. இங்ங்னமே, உயிரின்தன்மையை எல்லாவற்றையும் தனியாக வைத்து உணர்தல் வேண்டும். ஆகவே பதி, சத்து சித்து சூக்குமம்’. பாசம், அசத்து அசித்து துலம்'. பசு பதியை நோக்க அசத்து, அசித்து, துாலம் எனவும், பாசத்தை நோக்க, ‘சத்து சித்து சூக்குமம்' எனவும் சொல் லத்தக்க தனித் தன்மையுடையது என்பதாயிற்று. பசு சதசத்து, சிதசித்து, சூக்குமா சூக்குமம்' என்பதற்கும் இதுவே பொருளாதலை அறிந்து தெளிக. மேலும் மெய்கண்டார் தரும் விளக்கத்தைக் கூறுவேன். சித்தாயும் சத்தாயும் நிற்கும் பதிக்கும், அசித்தாயும் அசத்தாயும் நிற்கும் பாசத்திற்கும் சிறந்த தொடர்பு உண்டாவதில்லை. இதனால் இவற்றுள் ஒன்றால் மற்