பக்கம்:சைவமும் தமிழும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் # 47 றொன்றிற்கு வருவது ஒன்றும் இல்லை. இடையில் நிற்கும் பசுவே இரண்டனோடும் சிறந்த வகையில் தொடர்புடைய தாய் உள்ளது. இதனால் இஃது இரண்டாலும் வரும் நன்மை தீமைகளை எய்துகின்றது. இதனை மெய்கண்டார், இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா? என்னும் ஒர் அரிய தொடரால் விளக்குவர். இத்தொடர் மூன்று வேற்றுமைத் தொகைகளாக நின்று, மூன்று வேறு பொருள்களைத் தருவதையும் காட்டுவேன். (1) இரு திறன் அறிவுளது என்று இரண்டாம் வேற்றுமைத் தொகை யாக நின்று இருதிறன்களாகிய சத்து அசத்து இரண்டினை யும் அறியும் அறிவையுடையது என்னும் பொருளையும், 12) இதே தொடர் மூன்றாம் வேற்றுமைத் தொகையாக நின்று, இரு திறன்களாகிய சத்து அசத்துகளின் உதவியால் அறியும் அறிவினையுடையது என்னும் பொருளையும்; (3) இத்தொடர் ஏழாம் வேற்றுமைத் தொகையாக நின்று இரு திறன்களாகிய சத்து அசத்து ஆகிய இரண்டன்கண்ணும் நின்றறியும் அறிவையுடையது என்னும் பொருளையும் தருவதை அறிந்து தெளிக. மேற்கூறிய மெய்கண்டாரது விளக்கத்தை மேலும் தெளிவாக்குவது இன்றியமையாததாகின்றது. பாசம் அறிவில்லாத பொருள் என்பதையும், பசு அறிவுடைய பொருள் என்பதையும் நீ நன்கு அறிவாய். பதிக்குப் பசு தர்ன் இனமும் (ஸ்வஜாதி), பாசம் வேற்றினமும் (விஜாதி) ஆகின்றன. பதிக்குப் பசுதர்ன் இனம்’ என்பதை ஒப்புக் கொண்டு, பதியின் சாயை (நிழல்) அல்லது கூறே (அம்சம்) பசு என்பவ்ரது கூற்றை ஒப்புக் கொண்டால் நேரிடும் 8. சி. ஞா. போ. சூத்-7