பக்கம்:சைவமும் தமிழும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் # 49 குறிப்பிட்டுள்ளதை ஈண்டு நினைவு கூர்ந்து தெளிவுபெறுக. இத்துடன் இக் கடிதத்தை நிறைவு செய்கின்றேன். அன்பன், கார்த்திகேயன். 2T அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விழைகின்றேன். இக் கடிதத்தில் உயிரின் இயல்புபற்றிய மேலும் சில கருத்துகளைத் தெரிவிப்பேன். "அறியும் தன்மை உடையது உயிர்' என்பதை நீ நன்கு அறிவாய். அறிவு பண்பு; உயிர் அதனையுடைய பண்பி. அறிவாகிய பண்பு வேறு சில பண்புகள் போலக் காட்சிக்குப் புலனாகாது; அது கருத்திற்கே புலனாகும். அறிவாகிய பண்பு காட்சிக்குப் புலனாகாதொழியவே, அதனையுடைய உயிராகிய பண்பியும் காட்சிக்குப் புலனாகாதாகின்றது. இதனால் கருத்திற்கு மட்டிலும் புலனாகின்ற அறிவை காணப்பட்ட உடம்பின் பண்பாகக் கூறுதல் பொருந்தாது. அங்ங்னமே கருத்திற்கு மட்டிலும் புலனாகின்ற மனம் முதலிய பிற கருவிகளின் பண்பாகவும் கொள்ளல் சிறிதும் பொருந்தாது. இவற்றை முன்னர் எழுதிய கடிதங்களில் விளக்கியுள்ளேன். ஆகவே, பருவுடம்பு, (துரல் சரீரம்). நுண்ணுடம்பு (சூக்கும சரீரம்), நனிநுண்ணுட்ம்பு (பர. சரீரம்) என்னும் கருவிகளாகிய சடப்பொருள்களினும், அறிவே வடிவாய் நிற்கும் பரம் பொருளினும் வேறாய் நிற்கின்ற அறிவுடைப் பொருள் எதுவோ அதுவே உயிர் எனப்படும் என்பதை அறிந்து தெளிக.

பதி என்ற கடவுட் பொருள் ஒன்றேயாகும். உயிர் அவ்வாறன்றி அளவிறந்தன. அதனால் இறையை ஏகன்

என்றும், உயிரை அநேகன் என்றும் வழங்குவர்.