பக்கம்:சைவமும் தமிழும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் யன்றிப் பிறிதொன்றினை அறியமாட்டாது, ஒவ்வொன் றாகவே அறிவது; அதனையும் விட்டுவிட்டு அறிவது; அதனால் அது சிற்றறிவு என்று பேசப்படும். பதியினது அறிவு தான் அறிதலேயன்றிப் பிறிதோர் அறிவுக்கு அறி வாய் நின்று, அதனையும் அறியச் செய்யும் தன்மையுடை யது. அதனால் அது "நுண்ணறிவு” என்றும் சூக்கும் சித்து’ என்றும் வழங்கப்பெறும். பசுவினது அறிவிற்கு அத்தகைய ஆற்றல் இல்லை; அறிவித்தில் அறியுந்தன்மையை மட்டுமே உடையது; அதனால் அது பருஅறிவு என்றும் துல சித்து' என்றும் வழங்கப்பெறும். பதியின் இயல்புகளை விளக்கும் போதும் இவற்றையெல்லாம் குறிப்பிட்டேன்." இவண் குறிப்பிட்ட பசுவின் இயல்புகள் அனைத்தும் அதற்கு இயற்கையாய் என்றும் உள்ள தன்னியல்புகள் ஆகும். மேற்குறிப்பிட்ட பசுவின் தன்னியல்புகளுள் முதன்மை யாகச் சோல்லப்படுவது சார்ந்ததன் வண்ணமாதல்’ என்பது. இதனை விளக்குவேன். ஒரு பொருள் தன்னால் சாரப்பட்ட பொருளின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்பதுவே சார்ந்ததன் வண்ணமாத"லாகும். இத்தன்மையே உயிர்களின் உண்மை எனப்படும் சொரூப இலக்கணம் ஆகும். உயிர் பாசத்தைச் சார்ந்தவழிப் பாசமேயாயும், பதியைச் சார்ந்தவழிப் பதியேயாயும் நிற்கும் என்பதை அறிக. உயிர்கட்கு இன்பத்தை விரும்பு தலே இயற்கையாதலின், இன்பப் பொருளாகிய பதியை’ அடைதலே உயிரின் இயல்பாக அமைந்துள்ளது; ஒன்றி ரண்டு எடுத்துக்காட்டுகளால் இந்த இயல்பைத் தெளி விப்பேன். - - படிகம் தன்னை அடுத்துள்ள பொருளின் நிறத்தையே தன் நிறமாகக் கொண்டு நிற்பதை உன்னுக. அதாவது, 10. இயல்-2; கடிதம்-14; பக் (120.111) 11. அகமகிழ வருந்தேன், முக்கனி, கற்கண்டு, அமிர்தம்-என் றெல்லாம் தாயுமான அடிகள் பதியைக் குறிப்பிடுவது (கா.பா. பொருள் விளக்கம்-4) ஈண்டு நினைத்தல்தகும்.